Saturday, 24 May 2008

போலியான திருமண உறவுகள் மூலம் கனடா வருபவர்களை கண்டறிய நடவடிக்கை

வசதி கருதி ஏற்படுத்தப்பட்ட போலியான திருமண உறவுகளின் மூலம் கனடாவுக்கு வருபவர்கள் தொகை அதிகரித்து வருவதை கவனத்திற் கொண்டு அந்நாட்டு அரசாங்கமானது இத்தகைய மோசடித் திருமணங்கள் தொடர்பான தகவல்களைச் சேகரிக்க பல நாடுகளுக்கு இரகசிய அதிகாரிகள் குழுக்களை அனுப்பி வைத்துள்ளதாக கூறப்படுகிறது.

இது தொடர்பான தகவல் கனடாவிலிருந்து வெளிவரும் முன்னணி தினசரியான "த குளோப் அன்ட் மெயில்' பத்திரிகையில் வெளியிடப்பட்டுள்ளது. கனடாவின் குடியுரிமை மற்றும் குடிவரவு திணைக்களமானது ஒவ்வொன்றும் 5 பேருக்கும் அதிகமானோரைக் கொண்ட குழுக்களை குடியேற்றவாசிகளின் திருமணம் தொடர்பான தகவல்களை விசாரித்தறிய பல நாடுகளுக்கும் அனுப்பி வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

விசாவைப் பெறுவதன் பொருட்டு புகைப்படத்திற்கு போலியாக திருமண கோலத்தில் தோன்றியவர்கள் தொடர்பில் விபரங்களைச் சேகரித்து நடவடிக்கை எடுக்கவுள்ளதாக தெரிவித்த கனடிய அரசாங்க தரப்பு வட்டாரங்கள் எந்தெந்த நாடுகளுக்கு இக்குழுக்கள் அனுப்பப்பட்டுள்ளன என்ற தகவலை வெளியிட மறுத்துள்ளதாக மேற்படி செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன் கனடாவில் இணைந்து வாழ விரும்பும் ஜோடியினரிடம் சிறந்த கேள்விகளைக் கேட்டு உண்மையை வரவழைப்பதற்கு விசா உத்தியோகத்தர்களுக்கு பயிற்சியளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தற்போதைய கனடிய குடிவரவு முறைமையின் கீழ் வேறொரு நாட்டைச் சேர்ந்தவர் கனடியர் ஒருவரை திருமணம் செய்வதன் மூலம் ஆறு மாத காலப் பகுதிக்குள் கனடாவுக்குள் உள் நுழைய முடியும். ஏனையவர்கள் கனடாவுக்குள் நுழைய 6 வருடங்களுக்கும் அதிகமான காலம் காத்திருக்க வேண்டியுள்ளமை

No comments: