Friday, 16 May 2008

லங்கா டிசென்ட் இணையத்திற்கு பாதுகாப்பு அமைச்சினால் தொழில்நுட்பத் தடைகள்

லங்கா டிசென்ட் இணையத்தளத்திற்கு இன்று காலை முதல் தொழில்நுட்ப தடைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் இது முழுமையாக அரசியல் பழிவாங்கல் என லங்கா டிசேன்ட்டின் ஆசிரியர் குழாம் தெரிவித்துள்ளது. அண்மையில் இலங்கையின் பாதுகாப்பு அமைச்சினால் கொழும்பு சாட்டட் கட்டிடத்தில் அமைக்கப்பட்ட அலுவலகம் ஒன்றில், நிபுணர்கள் குழு ஒன்று இயங்கிவருகிறது.

இது இணையத்தளங்களை எவ்வாறு தடைசெய்யலாம் என்ற நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் லங்கா டிசென்ட் ஆசிரியர் குழுhம் குறிப்பிட்டுள்ளது.

லங்கா டிசென்ட் முன்னாள் அமைச்சரும் தற்போது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் அரசியல் எதிரியுமான மங்கல சமரவீரவுக்கு ஆதரவாக செயற்பட்டு வரும் இணையத்தளமாகும். ஆரசாங்கத்தின் இந்த நடவடிக்கைகளுக்கு ஊடக நிறுவனங்கள் தமது கடுமையான எதிர்ப்பை வெளியிட்டுள்ளன.
source:குளோபல் தமிழ்செய்தி

No comments: