Friday, 16 May 2008

வவுனியா கோவில்குளத்தில் புளொட் உறுப்பினர் மீது துப்பாக்கிச் சூடு

வவுனியா கோவில்குளம் பகுதியில் இன்று காலை 6 மணியளவில் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இந்த துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கானவர் பலத்த காயங்களுடன் வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக அநுராதபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

துப்பாக்கிச் சூட்டில் புளொட் அமைப்பைச் சேர்ந்த வரன் என்பவரே பலத்த காயமடைந்துள்ளதாக வவுனியா காவல்துறையினர் தெரிவித்தனர். இவர் கோவில்குளம் பகுதியிலுள்ள உமாமகேஸ்வரன் சமாதிக்கு முன்னால் நின்றுகொண்டிருந்த வேளையில் இன்று காலை அப்பிரதேசத்திற்கு வந்த இனந்தெரியாதவர்கள் இவர் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக காவல்றையினர் மேலும் தெரிவித்தனர்.

No comments: