Saturday, 24 May 2008

ஏறாவூரில் பகுதியில் இரண்டு முஸ்லீம் இளைஞர்கள் கடத்தப்பட்டுள்ளனர்.

மட்டக்களப்பு ஏறாவூரில் இரண்டு முஸ்லீம் இளைஞர்கள் கடத்தப்பட்டுள்ளனர். நேற்று முன்தினம் வியாழக்கிழமை (மே22) பிற்பகல் 1 மணியளவில் இவர்கள் பிள்ளையான் அணியினரால் கடத்தப்பட்டதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

இதனை அடுத்து காத்தான்குடி, ஆரையம்பதி பிரதேசங்களில் பதட்டம் நிலவுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏறாவூரில் வசிக்கும் இவர்கள் மின்சாரக் கட்டணத்தை செலுத்த கல்லடிக்குச் சென்றதாக கூறப்படுகிறது.

இது குறித்து மாகாணசபைக்கு தெரிவு செய்யப்பட்ட முஸ்லீம் உறுப்பினர் சுபையிர் பிள்ளையான் அணியின் பிரதேச முக்கியஸ்தர்களுடன் பேச்சு நடத்தி உள்ளார். இந்த நிலையில் கடத்தப்பட்ட இருவரும் இன்று மே24 விடுவிக்கப்படுவார்கள் என பிள்ளையான் அமைப்பின் மட்டக்களப்பு மேயர் சிவகீதா பிரபாகரன் உறவினர்களிடம் உறுதி அளித்துள்ளார்.

இந்த நிலையில் நேற்றும் ஆரையம்பதி காதான்குடி பிரதேசங்கள் இயல்பு நிலையை இழந்திருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்றிரவு மீண்டும் அமூலுக்கு கொண்டுவரப்பட்ட ஊரடங்குச் சட்டம் இன்று காலை நீக்கப்பட்டுள்ளது.

source:குளோபல் தமிழ்செய்தி

No comments: