Friday, 2 May 2008

“பிரபாகரன்” தொடர்கிறது சர்ச்சை:

பிரபாகரன் திரைப்படம் குறித்த வழக்கை எதிர்வரும் ஜூன் மாதம் 12ம் திகதிக்கு முன்னர் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளக் கூடாது என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்தத் திரைப்படத்தை தமிழகத்தில் திரையிடுவதற்கு தடைவிதிக்குமாறு கோரி விடுதலை சிறுத்தைகள் அமைப்பின் தலைவர் திருமாவளவன் சென்னை சிவில் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு எதிர்வரும் ஜூன் மாதம் 9ம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என அந்த நீதிமன்றம் முன்னர் அறிவித்திருந்தது. எனினும், அந்த வழக்கை முன்கூட்டியே விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டுமாறு கோரி திரைப்படத்தின் இயக்குநர் துஷார பீரிஸ் பதில் மனு தாக்கல் செய்திருந்தார்.

இதன்பின்னர், துஷார பீரிஸின் கோரிக்கை மனுவை எதிர்த்து திருமாவளவன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மற்றுமொரு வழக்கைத்; தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரiணைக்கு எடுத்துக் கொண்ட சென்னை உயர் நீதிமன்றம் ஜூன் மாதம் 12ம் திகதிக்கு முன்னர் பிரபாகரன் திரைப்படம் தொடர்பான வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளக் கூடாது என உத்தரவிட்டுள்ளது.

No comments: