ஜனாபதியின் மெய் பாதுகாவலர் ஒருவரின் நடை முறையில் அண்மையில் ஏற்பட்ட மாற்றங்கள் குறித்து புலனாய்வு துறையினர் கண் வைத்த போதே இந்த முயற்சி தெரிய வந்துள்ளது.
குறிப்பிட்ட பாதுகாப்பு அதிகாரி திடீர் பணக்காரராகி அவரது குணாதிசயங்களில் மாறுதலைக் கண்டதும் புலனாய்வு துறையினருக்கு குறிப்பிட்ட அதிகாரியின் மேல் சந்தேகம் ஏற்படத் தொடங்கியுள்ளது. அவரது காதலி ஒரு தமிழ் பெண்ணாகவும் அவர் தன் காதலனுக்காக பெரும் தொகை பண்த்தை வாரி வழங்கியதும் தகவல்களை சேகரித்துக் கொண்டு சென்ற போது புலனாய்வு துறையினரால் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. அதன் பின்னர் அந்த பெண் குறித்த தகவல்களை ஆராய முற்பட்ட போது அவர் நேரடியாக விடுதலைப் புலிகளது தொடர்பில் உள்ளவர் எனும் விபரமும் தெரிய வந்துள்ளது.
திருமண வைபவத்தில் வந்து சாட்சியாக கையெழுத்து வைக்கும் போது மணமகளை தற்கொலைதாரியாக்கி ஜனாதிபதியை கொல்ல எடுத்த ஒன்று முயற்சி புலனாய்வு பிரிவால் கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பிட்ட பாதுகாப்பு அதிகாரியோடு உறவை மேம்படுத்திக் கொள்ளவும் அதன் பின்னர் அவரை திருமணம் செய்யக் கூடிய நிலைக்கு அவரை உருவாக்கவும் கூடிய நடவடிக்கைகள் ஆரம்ப கட்டமாக தொடர்ந்துள்ளன. அவர்களது திருமணத்துக்கு சாட்சியாக கையெழுத்திட ஜனாதிபதியை வரவழைப்பதென்றும் பின்னர் ஒரு அந்தஸ்தான விடுதியில் திருமண நிகழ்வை கொண்டாடும் போது தற்கொலை குண்டை வெடிக்க வைக்கவும் திட்டமிடப்பட்டு இருந்துள்ளது. இவை அனைத்தும் பாதுகாப்பு அதிகாரிக்கு சந்தேகம் ஏற்படாத விதத்திலேயே இடம் பெற்றுள்ளதாகவும் தற்போது அனைத்தும் புலனாய்வு துறையினரால் அம்பலப் படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.
TO READ THIS NEWS IN ENGLISH:http://esoorya.blogspot.com/2008/05/suicide-bride.html
Friday, 2 May 2008
திருமண வைபவத்தில் வந்து சாட்சியாக கையெழுத்து வைக்கும் போது மணமகளை தற்கொலைதாரியாக்கி ஜனாதிபதியை கொல்ல முயற்சி
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment