வெளிநாடு செல்வதற்காக கொழும்பிற்கு வரும் தமிழர்களிடம் லட்சக் கணக்கில் கப்பம் பெற்றுக் கொண்ட காவற்துறை குழு ஒன்றை விசேட காவற்துறை பிரிவினர் கைது செய்துள்ளனர்.
இந்தக் குழுவினர் கோட்டை பிரதேசத்தைச் சேர்ந்த இரண்டு தமிழர்களை கடத்திச் சென்று 15 லட்ச ரூபா பணம் கப்பம் கோரியதாகத் தெரியவருகிறது. 8 லட்ச ரூபா கப்பத் தொகையை பெற்றுக் கொண்ட வேளையில் குறித்த காவற்துறை கடத்தல் கும்பலை விசேட காவற்துறை பிரிவினர் கைது செய்துள்ளனர்.
குறித்த கடத்தல் கும்பலுடன் காவற்துறை உயர் அதிகாரிகள் சிலருக்கும் தொடர்பிருப்பதாகத் தெரியவருகிறது. கப்பமாகப் பெற்றுக்கொள்ளப்படும் பணத்தில் ஒரு பகுதியை காவற்துறை உயர் அதிகாரிகளுக்கு இந்தக் கும்பல் வழங்கி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்த கடத்தல் கும்பலுடன் தொடர்புடைய இரண்டு காவற்துறை உத்தியோகத்தர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், வெளிநாடு செல்வதற்காக கொழும்பு வந்த 18 தமிழர்களிடம் லடசக்கணக்கில் பணம் பெற்றுக் கொள்ளப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.
போலி ஆவணங்களைத் தயாரிக்கும் நிறுவனமொன்றின் உதவியுடன் இந்த கடத்தல் சம்பங்கள் இடம்பெற்றுள்ளதாகவும் காவற்துறை விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது. போலியான ஆவணங்களைத் தயாரித்த வெளிநாடு செல்ல முயற்சிக்கும் தமிழர்கள் தொடர்பான தகவல்களை குறித்த கடத்தல் குழுவிற்கு போலி ஆவணத் தயாரிப்பாளர் அறிவிப்பார் எனத் தெரியவருகிறது.
இதன்பின்னர் அந்தத் தமிழர்களை மடக்கிப் பிடித்து கப்பமாக பணம் பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளதாகவும் காவற்துறை விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்ட காவற்துறை உத்தியோகத்தர்களிடம் 450,000 பணமும், ஒரு கைத்துப்பாக்கியும் காணப்பட்டதாக பொலிஸார் மேலும் தெரிவிக்கின்றனர்.
source:குளோபல் தமிழ்செய்தி
Monday, 19 May 2008
வெளிநாடு செல்வதற்காக கொழும்பிற்கு வரும் தமிழர்களிடம் லட்சக் கணக்கில் கப்பம் பெற்றுக் கொண்ட காவற்துறை குழு ஒன்றை விசேட காவற்துறை பிரிவினர் கைது
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment