கிழக்குத் தேர்தல்களில் தோல்வியடைந்த ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் முஸ்லிம் ஆயுதக் குழுவொன்றை உருவாக்க முயற்சிப்பதாக சுற்றாடல் அமைச்சர் சம்பிக்க ரணவக்க குற்றஞ்சாட்டியுள்ளார்.
கிழக்கில் ஆயுதந்தரித்த முஸ்லிம் கடும்போக்காளர்களை உருவாக்கி தமிழ் முஸ்லிம் மோதல்களை ஏற்படுத்த ஹக்கீம் முயற்சிப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த முஸ்லிம் ஆயுததாரிகள் காத்தான்குடி பிரதேசத்தில் வைத்து தமிழர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். ஆயுத செயற்பாடொன்றுக்கு முஸ்லிம்கள் தள்ளப்பட்டால் அதன் பொறுப்பை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீமே ஏற்றுக்கொள்ள வேண்டும்
என அமைச்சரும் ஹெல உறுமயவின் கொள்கைவகுப்பாளருமான பாட்டலி சம்பிக்க ரணவக்க சிங்கள ஏடொன்றிற்கு வழங்கிய செவ்வியில் தெரிவித்துள்ளார்.
source:குளோபல் தமிழ்செய்தி
Monday, 19 May 2008
ஹக்கீம் முஸ்லிம் ஆயுதக் குழுவை உருவாக்க முயற்சி!!!
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment