Saturday, 24 May 2008

கிழக்கு மாகாண சபைத் தேர்தல்களின் பின்னர் பிரதேசத்தில் ஊழல் மற்றும் பீதி என்பன வெகுவாக அதிகரித்துள்ளன

caffe1.jpgகிழக்கு மாகாண சபைத் தேர்தல்களின் பின்னர் பிரதேசத்தில் ஊழல் மற்றும் பீதி என்பன வெகுவாக அதிகரித்துள்ளதாக சுதந்திரமானதும், நியாயமானதுமான தேர்தல்களுக்கான மக்கள் செயற்பாட்டுக் குழு தெரிவித்துள்ளது.

கிழக்குத் தேர்தல் தொடர்பான இறுதி அறிக்கையை சமர்ப்பித்து உரையாற்றிய கபேயின் இணைப்பாளர் கீர்த்தி தென்னக்கோன்; இதனைத் தெரிவித்துள்ளார். கொழும்பு மஹாவலி கேந்திர மையத்தில் இந்த நிகழ்வு இடம்பெற்றது.

கிழக்குத் தேர்தல்களில் போட்டியிட்டு தோல்வியடைந்த சில வேட்பாளர்கள் பிரதேசத்தில் தொடர்ந்தும் வாழ்வதற்கு அஞ்சி கொழும்பிற்கு வந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

தமக்கு ஏற்பட்டுள்ள உயிர் அச்சுறுத்தல் காரணமாக வெளிநாடு செல்வதற்கு அவர்கள் முயற்சித்து வருவதாக அவர் தெரிவித்துள்ளார். மாறுபட்ட அரசியல் கொள்கைகளை பிரதிநிதித்துவப்படுத்துவோர் எதிர்காலத்தில் எவ்வாறு தமது அரசியல் நடவடிக்கைகளை முன்னெடுக்கப் போகின்றார்கள் என்பது கேள்விக்குறியாக அமைந்துள்ளது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தேர்தல் தினமன்று மாத்திரம் கிழக்கு மாகாணத்தில் சுமார் 235 தேர்தல் வன்முறைச் சம்பவங்கள் இடம்பெற்றதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

source:குளோபல் தமிழ்செய்தி


No comments: