கிழக்கு மாகாண தேர்தலில் தெரிவான உறுப்பினர்களுடனான சந்திப்பொன்று இன்று நண்பகல் அலரிமாளிகையில் ஜனாதிபதி தலைமையில் நடைபெற்றது. இதன்போது உரையாற்றுகையிலேயே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார். இச்சந்திப்பில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்று தெரிவான எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா உள்ளிட்ட உறுப்பினர் மற்றும் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் இயக்கத் தலைவர் பிள்ளையான் உள்ளிட்ட உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொண்டனர். இதன்போது தொடர்ந்து உரையாற்றிய ஜனாதிபதி மேலும் கூறியதாவது: கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் பெற்றுக்கொண்ட வெற்றி அனைத்து மக்களுக்கும் வழங்கப்பட வேண்டுமாயின் தேர்தலின் போது தெரிவான உறுப்பினர்கள் இனபேதமின்றியும் சமாதானத்துடனும் புரிந்துணர்வுடனும் தமது நடவடிக்கைகளை மேற்கொள்வது முக்கியமாகிறது. பதவிகளுக்காக பேதங்ளை ஏற்படுத்திக்கொள்ளாமல் பெற்றுக்கொண்ட இந்த மாபெரும் வெற்றியால் மக்கள் நன்மையடைய வழிவகுக்க வேண்டும். மீண்டும் ஒரு முறை கிழக்கு மாகாணத்திற்குள் விடுதலைப்புலிகள் இயக்கம் எந்த ஆதிக்கத்தையும் செலுத்த இடமளிக்கக் கூடாது. தேர்தல் நடைபெற்ற தினத்திற்கு முன்னர் கூட அம்பாறை நகரில் குண்டினை வெடிக்கச் செய்து சிறந்ததொரு தேர்தல் நடைபெறாதிருக்கும் வகையில் விடுதலைப்புலிகள் சதி வேலைகளில் ஈடுபட்டனர். ஆயினும் அவர்களின் சதி திட்டம் மக்களால் நிராகரிக்கப்பட்டதுடன் ஜனநாயகத்தையும் நிலைபெற அரசாங்கம் வழிவகுத்துள்ளது. இந்த ஜனநாயகம் தொடர்ந்து பாதுகாக்கப்பட வேண்டுமாயின் தேசிய ஒற்றுமை பேணப்படும் வகையில் கிழக்கு மாகாணத்திற்குள் அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும். ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி சார்பில் போட்டியிட்டு தெரிவு செய்யப்பட்ட கட்சிகளின் உறுப்பினர்கள், கட்சித் தலைவர்கள் ஆகிய அனைவரினதும் கருத்துக்களுக்கும் மதிப்பளித்தே கிழக்கு மாகாண முதலமைச்சர் தெரிவு செய்யப்படுவார். அதனடிப்படையிலேயே இந்த சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் கலந்து கொண்ட உறுப்பினர்கள் அனைவரும் தமது அபிப்பிராயங்களை ஜனாதிபதிக்கு தெரிவித்தனர். இவர்கள் அனைவரது அபிப்பிராயங்களை தாம் கருத்திற் கொண்டே தீர்மானம் எடுக்கப்படுவதாக ஜனாதிபதி மேலும் தெரிவித்தார். |
Friday, 16 May 2008
பதவிகளுக்காக பேதங்களை ஏற்படுத்தாது மக்களின் நன்மைக்கு வழிவகுக்க வேண்டும் - கிழக்கு மாகாண உறுப்பினர்களுடனான சந்திப்பில் ஜனாதிபதி
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment