Wednesday, 21 May 2008

மகிந்த அரசின்மீது வழக்குத்தொடர சர்வதேசநீதிமன்றில் மகஜர் கையளிப்பு

நெதர்லாந்தில் "த ஹேக்" நகரிலுள்ள சேர்பிய அதிபர் மிலோசவிச் போன்ற உலகப்போர்க்குற்றவாளிகளை விசாரணைசெய்த சர்வதேச நீதிமன்றத்தில் சிறீலங்கா அரச அதிபர் மகிந்த அரசின்மீது வழக்குத்தொடர தகுந்த போர்க்குற்ற ஆதாரங்களுடன் மகஜர் ஒன்று அனைத்துலக காணாமல்போதலிற்கு எதிரான அமைப்பினால் இன்று (21.05.08) மதியம் 2மணிக்கு கையளிக்கப்பட்டுள்ளது.

இதனைப்பெற்றுக்கொண்ட இவ் நீதிமன்றின் பொறுப்புவாய்ந்த அதிகாரிகள் இவ்வழக்கினை தொடருகின்றவகையில் இவ்நீதிமன்றின் வழக்கறிஞர்களின் சபையிடம் கையளிப்பதாக உறுதி அளித்துள்ளனர்.

இதன்போது சில தமிழ்மக்களும் சில வெளிநாட்டவர்களும் இம்மன்றின்முன் ஒன்றுகூடி மகிந்த அரசினால் படுகொலைசெய்யப்பட்டவர்களின் படங்களையும் பதாகைகளையும் தாங்கியவாறு கவனயீர்ப்புபோராட்டத்தினையும் நடாத்தியிருந்தனர்.

மேலும் இவ்வழக்கை வேகப்படுத்துவதற்கு இன்னும் பலபோராட்டங்களை முன்னெடுக்கப்போவதாகவும் இன்றைய நடவடிக்கை ஒரு ஆரம்பமே எனவும் இவ் அமைப்பின் செயலாளர் திரு. அனா தெரிவித்துள்ளார். இதற்காக இவர் பிரபலமான பலவழக்கறிஞர்களுடன் சட்ட ஆலோசனைகளையும் நடாத்திவருகின்றார்.


1 comment:

ttpian said...

well done!
srilanka just lost a seat in UNHR council-despite the fact it has received(rogue nations) 101 votes!it should also urge the war crime tribunal to punish supporting nations also!
second blow.....