சுமார் 60 வயது நிரம்பிய குடும்பஸ்தர் ஒருவர்; வெள்ளைவானில் வந்தவர்களால் கடத்தி செல்லப்பட்டுள்ளார் இச்சம்பவம் நேற்றையதினம் 18ம் திகதி புத்தளம் பகுதியிலுள்ள காரைதீவு எனும் முஸ்லிம் கிராமத்தில் இடம்பெற்றுள்ளது. மன்னார் மாவட்டத்தில் இருந்து இடம்பெயர்ந்து தற்போது காரைதீவு கிராமத்தில் வசிக்கும் முஹம்மது யூசுப் என்பவரே கடத்தி செல்லப்பட்டவராவார். இதுகுறித்து வண்ணாத்திவில்லு பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது புத்தளத்தில் கடந்த இருவாரங்களுக்குள் இடம்பெற்ற மூன்றாவது கடத்தல் சம்பவம் இதுவென தெரிவிக்கப்படுகிறது ஏற்கனவே கடத்தப்பட்ட ஒரு தமிழ் வாலிபனும், தமிழ்யுவதியும் பின்னர் விடுவிக்கப் பட்டுள்ளமை குறிப்பிடதக்கது.
Monday, 19 May 2008
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment