Tuesday, 20 May 2008

கண்டி கடுகஸ்தோட்டை பாலத்தில் குண்டுவெடிப்பு

கண்டி கட்டுகஸ்தோட்டையில், தொடரூந்து பாதை அமைந்துள்ள பாலத்தில் வெடிப்புச் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. நேற்றிரவு 11 மணியளவில் கட்டுகஸ்தோட்டைப் பிரதேசத்தில் பாரிய சத்தமொன்று கேட்டுள்ளது.

இதனையடுத்து காவல்துறையினர் மேற்கொண்ட சோதனையின் போதே மகாவலி கங்கையை ஊடறுத்துள்ள பாலத்தில் வெடிப்புச் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் கண்டறிந்துள்ளனர். வெடிப்புச் சம்பவத்தினால் குறித்த இரும்புப் பாலத்திற்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் கண்டியில் இருந்து வத்தேகம மாத்தளைக்கான தொடரூந்து சேவைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தொடரூந்து திணைக்களம் அறிவித்துள்ளது.

அன்மைய நாட்களில் கண்டிப் பிரதேசத்தில் இடையிட்டு இடம்பெறும் இவ்வாறான குண்டு வெடிப்புக்கள் காவற்துறை மட்டத்தில் பெரும் குளப்பத்தை ஏற்படுத்தி உள்ளதுடன், மக்கள் மத்தியிலும் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளன.

இந்த நிலையில் விடுதலைப் புலிகளின் தாக்குதல்கள் இப்போ மத்திய மாகாணத்தை நோக்கி சென்றுள்ளதா? என்ற சந்தேகம் பாதுகாப்பு தரப்பில் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

No comments: