Thursday, 22 May 2008

கிழக்கின் பாலியல் வன் கொடுமைகள் நிறுத்தப்படுமா?

கிழக்கு மாகாணசபைத்தேர்தல் தினத்தன்று இரண்டு யுவதிகள் கல்முனையில் வைத்து பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டமையை தொடர்பாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை, முழு அளவிலான விசாரணைகளை முன்னெடுத்துள்ளது.

இதற்காக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையின் அதிகாரிகள் கல்முனைக்கு சென்றுள்ளனர். இந்த பாலியல் வல்லுறவுடன் இனம்தெரியாத ஆயுததாரிகளுக்கு தொடர்பிருப்பதாக பேசப்பட்டது. இதன்படி குற்றவாளிகள் விரைவில் கைதுசெய்யப்படுவர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அண்மைக்காலமாக கிழக்கில் மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை மாவட்டங்களில் இளம்பெண்கள் கடத்தப்படுவதும் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்படுவதும் சாதாரண நிகழ்வுகளாகிவிட்டதாக கவலை வெளியிடப்பட்டுள்ளது.

அண்மையில் சிங்கள இணையத்தளம் ஒன்று திருகோணமலையில் ஆயுதக் குழு ஒன்றின் உறுப்பினர்கள் மேற்கோள்ளும் பாலியல் வன்கொடுமைகள் பற்றி செய்தி வெளியிட்டு இருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments: