Friday, 2 May 2008

வடக்கில் குண்டு மழை பொழிவதை தடுக்க தொழிலாளர் வர்க்கம் போராட வேண்டும் - பால தம்போ

ராஜபக்ஷவும் அரச பயங்கரவாதத்தை முன்னெடுப்பதாக இலங்கை வர்த்தக கைத்தொழில் மற்றும் பொது தொழிலாளர் சங்கத்தின் செயலாளர் பலா தம்போ தெரிவித்துள்ளார்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் குண்டுத் தாக்குதல்களைப் போன்றே, அரசாங்கத்தினால் வடக்கு கிழக்கில் மேற்கொள்ளப்படும் குண்டுத் தாக்குதல்களும் நிறுத்தப்பட வேண்டும் என அவர் கோரியுள்ளார்.

தொழிற்சங்கக் கூட்டமைப்பினால் நேற்றைய தினம் நடாத்தப்பட்ட மே தினக் கூட்டத்தில் கலந்து கொண்ட போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

அரசாங்கம் தனது நாசகார செயல்களை தடுத்து நிறுத்தி, லஞ்ச ஊழலை இல்லாதொழிக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என அவர் கோரியுள்ளார்.

மேலும், அர்த்தமற்ற இந்த யுத்தத்திற்காக செலவிடப்படும் பாரியளவு நிதியை உழைக்கும் வர்க்கத்தினரின் நலத்திட்டங்களுக்காக பயன்படுத்த முடியும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஐக்கிய தொழிலாளர் சம்மேளனம், இலங்கை வங்கி ஊழியர் சங்கம் இலங்கை வர்த்தக கைத்தொழில் மற்றும் பொதுத் தொழிலாளர் சங்கத்தின் இணைச் சங்கங்கள் உள்ளிட்ட பல சங்கங்கள் இந்த மே தினக் கூட்ட நிகழ்வுகளில் கலந்து கொண்டன.

நேற்றைய தினம் 1 மணியளவில் கொள்ளுப்பிட்டியில் அமைந்துள்ள சங்கத்தின் தலைமையக் காரியாலத்தில் ஆரம்பமான ஊர்வலம் காலி வீதியூடாக மாலை ஹைட்பார்க் மைதானத்தை வந்தடைந்தது.

No comments: