Monday, 19 May 2008

தமிழகத்தில் இலங்கைத் தமிழருக்கு ஆதரவாக போராட்டம்

இந்திய மத்திய அரசு இலங்கை தமிழர்களை பாதுகாக்குமாறு வலியுறுத்தி அனைத்து தமிழ் அமைப்புகளின் கூட்டமைப்பினர் சென்னையில் நேற்று உணவு தவிர்ப்பு போராட்டம் ஒன்றில் ஈடுபட்டனர்.

தமிழக தலைநகர் சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகைக்கு முன்பாக இந்த போராட்டம் நடைபெற்றது. இலங்கையில் முறையானதொரு அரசியல் தீர்;வு ஏற்படுத்தப்பட வேண்டும். தமிழர்களுக்கு உரிமைகளை பெற்றுக்கொடுக்க இந்திய மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அனைத்து கட்சிகளும் ஏகமனதாக இந்த தீர்மானத்தை நிறைவேற்றினர்.

இந்த நிலையில் இந்திய மத்திய அரசாங்கம், தமிழக சட்டபேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை செயல்படுத்த வேண்டும் என நேற்றைய போராட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

போராட்டததை பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர்.ஜி.கே மணி ஆரம்பித்து வைத்தார். திராவிட இயக்க தமிழர் பேரவையின் பொதுச் செயலாளர் சு.ப.வீரபாண்டியன் தலைமையில் இந்த போராட்டம் நடைபெற்றது.போராட்டத்தில் தமிழீழ ஆதரவாளர்கள் பலர் கலந்துகொண்டனர்.

1 comment:

ttpian said...

i am fed up with routine follow up's like this!
Already India has taken anti tamil approach! then why begging to Delhi again?
Let this delhi beggars are adamant_till they are in power,they will dictate-out of power means they(delhi) will beg in front of people!