Sunday, 4 May 2008

திருகோணமலை தேர்தல் பிரசாரத்தில் அதிகார துஷ்பிரயோகம்:

தேர்தல்களை இலக்கு வைத்து திருகோணமலை மாவட்டத்தில் பல்வேறு நடவடிக்கைகளை அரசாங்க அமைச்சர்கள் முன்னெடுத்துள்ளதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.

இரத்தினபுரி மாவட்டத்தைச் சேர்ந்த இரண்டு ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு அமைச்சர்கள் இந்த நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர். அரச சொத்துக்கள் மற்றும் அதிகாரத்தை முறையற்ற விதத்தில் பயன்படுத்தி இந்தத் தேர்தல் வேட்டை இடம்பெறுவதாக கொழு;பு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

சமுர்த்தி திட்டம் உள்ளிட்ட பல அரசாங்க நலத்திட்ட வளங்களைப் பயன்படுத்தி திருகோணமலை மாவட்டத்தில் அரசாங்கம் தேர்தல் பிரசார நடவடிக்கையை முன்னெடுக்க உள்ளதாகத் தெரியவருகிறது.

திருகோணமலை மாவட்டத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் போட்டியிடுவதனால் பீதியடைந்த அரசாங்கம் இரண்டு அமைச்சர்களினூடாக வாக்கு வேட்டையை நடத்தவுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

அமைச்சர் ஜோன் செனவிரத்ன மற்றும் சுசந்த புஞ்சிநிலமே ஆகியோரிடமே இந்தத் தேர்தல் பிரசார நடவடிக்கைகள் ஒப்படைக்கப்பட்டுள்ளன. குறிப்பாக சமுர்த்தி அதிகாரிகளினூடாக மக்களிடம் வாக்கு வேட்டை நடத்தப்படவுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

No comments: