Monday 5 May 2008

கையடக்கத் தொலைபேசி வாயிலான வீதி வழிகாட்டல் சேவை (Mobile Navigation System) இனை Dialog Telekom அறிமுகப்படுத்தியுள்ளது.

Dialog Telekom நிறுவனம் Geographical Information Systems (Private) Limited நிறுவனத்துடன் இணைந்து இந்த வருடம் ஏப்ரல் மாதம் முதல் கையடக்கத் தொலைபேசி வாயிலான வீதி வழிகாட்டல் சேவை (Mobile Navigation System) ஒன்றினை ஆரம்பித்துள்ளது.

கொழும்பு மாநகர சபை மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் உள்ள A, B, C மற்றும் D தர வீதிகளைக் கொண்ட டிஜிற்றல் வீதி வழிகாட்டி வசதியினை Dialog SatNav மூலம் பெற்றுக் கொள்ள முடியும்.

Dialog SatNav வசதியைப் பயன்படுத்துவோர் செய்மதி மூலம் இலங்கையின் வீதி வலையமைப்பிலுள்ள இடங்களை அறிந்து கொள்ள முடியும்.

இதற்கு மேலதிகமாக Dialog SatNav சேவை மூலம், குறித்த இடத்தை அடைவதற்கான ஒலி மற்றும் ஒளி மூல வழிகாட்டல் சேவையினையம் வழங்குகிறது.

Dialog SatNav சேவையினை பயன்படுத்துவோர் இரு பரிமாண மற்றும் முப்பரிமாணங்களில் வீதி வரைபடத்தினைப் பார்வையிட முடியும்.

"எமது வாடிக்கையாளர்களுக்கு மிகப் புதிய கையடக்கத் தொலைபேசி தொழில்நுட்ப சேவையினை வழங்குவதையிட்டு நாம் பெருமையடைகிறோம" என Dialog Telekom நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி ஹான்ஸ் விஜேசூரிய தெரிவித்துள்ளார்.

1 comment:

Anonymous said...

Good words.