வவுனியா, மன்னார் மாவட்டங்களில் கைத்தொலைபேசிகளும் சிடி.எம்.ஏ எனப்படும் கம்பியில்லாத தொலைபேசிகளும் நேற்று முதல் செயலிழந்துள்ளன.
கம்பிகளின் மூலம் இணைக்கப்பட்டுள்ள ரெலிகொம் நிறுவனத்தின் தொலைபேசிகளும் அந்த நிறுவனத்தின் சிடி.எம்.ஏ கம்பியில்லா தொலைபேசிகளும் மாத்திரமே செயற்படுவதாக, இங்குள்ள தொலைபேசி பாவனையாளர்கள் தெரிவிக்கின்றார்கள்.
கிழக்கு மாகாண தேர்தலையொட்டி மேற்கொள்ளப்பட்டுள்ள பலத்த பாதுகாப்புச் செற்பாடுகளின் ஓர் அங்கமாகவே, வடக்கில் இந்தத் தொலைபேசிகள் துண்டிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
Sunday, 11 May 2008
வவுனியா மன்னார் மாவட்டங்களில் கைத்தொலைபேசிகள் செயலிழந்தன-virakesari
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment