தொழில்நுட்பக் கோளாறு காரணமாக அண்மையில் மன்னார் அரிப்பு பிரதேசத்தில் தரையிறக்கப்பட்ட எம்.ஜ.17 உலங்குவானூர்தியில் சென்ற 11 இந்தியப்படையினரை அரசாங்கம் ரகசியமான முறையில் கட்டுநாயக்க விமான நிலையத்தின் ஊடாக இந்தியாவுக்கு அனுப்பி வைத்துள்ளது.
இந்த தகவலை ஊடகங்களுக்கு மறைக்க அரசாங்கம் கடும் முயற்சிகளை மேற்கொண்டிருந்தது. வானூர்தி தரையிறக்கப்பட்டதும் அது இந்தியாவிற்கு சொந்தமான உலங்குவானூர்தி என தெரிவித்த அரசாங்கம் சில மணி நேரங்களின் பின்னர் அது இலங்கைக்கு சொந்மானது என கூறியது.
திருத்தப்பணிக்காக இந்தியாவுக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் மீண்டும் திரும்பி வரும் போது இந்த தொழிற்நுட்பக் கோளாறு ஏற்பட்டதாகவும் அரசாங்கம் கூறியது.
இதனை ஊடங்களுக்கு அரசாங்கம் மறைக்க முயன்ற போதும் அந்த தகவல்களை பல ஊடங்கள் வெளியிட்டிருந்தன. குறித்த உலங்குவானூர்தி இந்தியாவுக்கு சொந்தமானது எனவும் அதில் 11 இந்திய படையினர் பயனித்தனர் எனவும்;
ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டிருந்தன. எனினும் ஊடகங்களில் வெளியான இந்த செய்திகளை அரசாங்கம் மறுக்கவுமில்லை ஆமோதிக்கவுமில்லை.
இந்த சம்பவம் ஊடாக அரசாங்கத்திற்கும் இந்தியாவுக்கும் இடையில் இடம்பெற்ற ரகசிய உடன்படிக்கை ஒன்றையேனும் மறைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருக்கலாம் என பலத்த சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக சிங்கள இணையத்தளம் ஒன்று தெரிவித்துள்ளது.
Saturday, 16 August 2008
மன்னாரில் தரையிறங்கிய 11 இந்தியப் படையினர் இரகசியமாக இந்தியாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment