பெண் ஊடகவியலாளர் தக்சிலா தில்ருக்ஷp ஜயசேனவை ரி.எம்.வி.பியின் உறுப்பினர் ஒருவர் அச்சுறுத்தியதாக பொலன்னறுவை காவற்துறையில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
வடமத்திய மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடும் தமிழ்மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் மங்களம் மாஸ்டர் உள்ளிட்ட குழுவினரின் ஆயுதங்களைக் களையுமாறு கோரி கடந்த 15 ஆம் திகதி மன்னம்பிட்டியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம் தொடர்பான செய்தியை இந்தப் பெண் ஊடகவியலாளர் சேகரித்து அனுப்பியுள்ளார்.
ஆர்ப்பாட்டத்தின் பின்னர் தான் சென்ற முச்சக்கர வண்டியை பின்தொடர்ந்து மோட்டார் சைக்கிளில் பயனித்த ஒருவர், முச்சக்கர வண்டிக்கு குறுக்காக தனது மோட்டார் சைக்கிளை நிறுத்தி, வண்டியை நிறுத்தியதுடன் தன்னை அச்சுறுத்தியதாக ஊடகவியலாளர் தெரிவித்துள்ளார்.
குறித்த அந்த நபர் தான் மங்களம் மாஸ்டர் மற்றும் கருணாவை நேர்கண்ட போது, ரி.எம்.வி.பியின் முகாமில் இருந்தாகவும் கூறியுள்ளார்.
ஆர்ப்பாட்டம் நடத்தியவர்களை பிடித்து செல்லவே வந்ததாகவும் யாரையும் திருப்பி அனுப்பும் நோக்கில் வரவில்லை எனவும் அந்த நபர் அச்சுறுத்தும் தொனியில் குறிப்பிட்டுள்ளார்.
எனினும் முறைப்பாட்டில் அச்சுறுத்தியவரின் பெயர் குறிப்பிடப்படாததன் காரணமாக அவரை கைதுசெய்து விசாரணைகளை மேற்கொள்ள முடியாது என காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.
No comments:
Post a Comment