""எமக்கோ வயதாகி விட்டது. புதியனவற்றைக் கற்று ஞாபகத்தில் வைத்திருக்கும் ஆற்றலை எமது மூளை இழந்து விட்டது'' என கவலைப்படுபவர்களை மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்த்தும் செய்தியொன்றை ஜேர்மனிய விஞ்ஞானிகள் வெளியிட்டுள்ளனர்.
வயதாவதால் மூளையின் செயற்பாடு மந்தமடைந்து விடுவதில்லை. அது புதிய விடயங்களையும் யுத்திகளையும் வெகு விரைவாகக் கற்றுக் கொள்கிறது என இந்த விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
இதற்காக 50 வயதுக்கும் 67 வயதுக்கும் இடைப்பட்ட ஆரோக்கிய நிலையிலுள்ள 69 ஆண்கள் மற்றும் பெண்களுக்கு மூன்று பந்துகளை மாறிமாறி மேலே எறிந்து கீழே விழாமல் பிடிக்கும் யுக்தி தொடர்பில் கற்பிக்கப்பட்டது.
இந்நிலையில் மேற்படி வயோதிபர்கள், இளைஞர்கள் போன்று குறைந்தது 60 செக்கன் வரை பந்துகளை கீழே விழவிடாமல் பிடித்ததாக மேற்படி ஆய்வுக்குத் தலைமை தாங்கிய ஹம்பேர்க் பல்கலைக்கழகத்தின் நரம்பியல் பிரிவைச் சேர்ந்த ஜனினா போய்கே தெரிவித்தார்.
மேற்படி 69 வயோதிபர்களும் இதற்கு முன் பந்துகளை இவ்வாறு எறிந்து பிடிக்கும் தந்திர விளையாட்டைக் கற்றவர்கள் அல்ல என்பது குறிப்பிடத்தக்கது
Tuesday, 19 August 2008
புதியவற்றை கற்பதற்கு வயதான மூளை தடையல்ல - ஜேர்மனிய விஞ்ஞானிகள்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment