Monday, 18 August 2008

தமிழர் இன ஒடுக்குமுறைக்கு எதிராக ஒபாமா குரல் கொடுப்பார் – இராமநாதன்

இலங்கையில் தமிழர் இன ஒடுக்குமுறைக்கு எதிராக ஒபாமா குரல் கொடுப்பார் என அமெரிக்கத் தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் முக்கிய செயற்பாட்டாளர் ரஞ்சன் இராமநாதன் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

இலங்கையில் பல்வேறு துன்பங்களை எதிர்நோக்கி வரும் எமது சொந்தங்களுக்கு ஒபாமா ஆதரவு வழங்குவார் எனப் பெரிதும் எதிர்பார்ப்பதாக இராமநாதன் குறிப்பிட்டுள்ளார்.

தமிழர் இன ஒடுக்குமுறைக்கு எதிராக ஒபாமா குரல் கொடுப்பார் எனத் திடமாக நம்புவதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்க ஜனநாயகக் கட்சி ஜனாதிபதி வேட்பாளர் பரக் ஒபாமா தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்களிடம் ஒபாமா நிதி பெற்றுக் கொண்டதாகத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

அமெரிக்க ஜனாதிபதி வேட்பாளர் தெரிவிற்காகப் போட்டியிட்ட ஹிலாரி கிளின்ரனுக்கு ஏற்கனவே விடுதலைப் புலி ஆதரவாளர்கள் பணம் வழங்கியதாகக் குற்றம் சுமத்தப்பட்டது.

2300 000அமெரிக்க டொலர்களைப் புலி ஆதரவாளர்களில் முக்கிய நபரான ஹிலாரி கிளின்ரனுக்கு ரஞ்சன் இராமநாதன் வழங்கியதாகப் பிரபல ஆங்கில நாளிதழொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

அமெரிக்கத் தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் பிரதான செயற்பாட்டாளர் எனத் தெரியவந்ததை அடுத்து பெறப்பட்ட நிதி திருப்பி கொடுக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இலங்கை அரசாங்கத்தைக் கடுமையாக விமர்சிப்போருக்கு இராமநாதன் நிதியுதவி அளித்து வருவதாகக் குறிப்பிடப்படுகிறது.

இலங்கையின் தேசியப் பிரச்சினைக்குப் பொஸ்னிய முறையிலான தீர்வுத் திட்டமொன்று முன்வைக்கப்பட வேண்டும் என அமெரிக்கத் தமிழர் அமைப்புக்கள் கோரிக்கை விடுத்துள்ளன.

தமிழீழ விடுதலைப் புலிகளுக்குச் சார்பான அமைப்புக்கள் பல்வேறு பெயர்களில் அமெரிக்காவில் இயங்கி வருவதாகச் சுட்டிக் காட்டப்படுகிறது

No comments: