Tuesday 19 August 2008

அரசியல் தீர்வு முன்வைக்கப்படாவிட்டால் ஏதாவது ஓர் முறையில் போராட்டம் தொடரும் - பேராசிரியர் ரட்னஜீவன்


அரசியல் ரீதியான தீர்வுத் திட்டமொன்று முன்வைக்கப்படாது தமிழீழ விடுதலைப் புலிகளை யுத்தத்தின் மூலம் இல்லாதொழித்தால், பிறிதொரு ரூபத்தில் போராட்டம் தொடருவதைத் தவிர்க்க முடியாதென நியூயோர்க் பல்கலைக்கழகப் பேராசிரியர் ரட்னஜீவன் ஹொல் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் சமாதானம் என்ற தொனிப்பொருளில் நடைபெற்ற கருத்தரங்கொன்றில் உரையாற்றும்போது பேராசிரியர் இந்தக் கருத்துக்களை முன்வைத்துள்ளார்.

தமிழீழ விடுதலைப் புலிகளிடமிருந்து பாதுகாப்பதற்காகவே குண்டுகள் வீசப்படுவதாக அரசாங்கம் சுட்டிக் காட்டுகின்றது. எனினும், உக்கிர மோதல்களினால் சிவிலியன்கள் பாதிக்கப்படும் அவலம் தொடர்பாக உரிய கவனம் செலுத்தப்படவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

தமிழர் உரிமைகள் நியாமான ரீதியில் பாதுகாக்கப்படக் கூடிய ஓர் அரசியல் தீர்வுத் திட்டத்தின் மூலம் மட்டுமே நிரந்தர சமாதானத்தை ஏற்படுத்த முடியும் என அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.

தமிழ், சிங்கள முஸ்லிம் இனத்துவ அடையாளங்களை உறுதிப்படுத்தக் கூடிய பூகோள ரீதியான தனிப்பட்ட அலகுகளின் மூலம் பிரிவினைவாதம் ஏற்படாது என அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.

இவ்வாறான ஓர் அதிகார பரவலாக்கல் திட்டத்தின் மூலமே அனைத்து இன மக்களிடையேயும் நல்லிணக்கம் ஏற்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

No comments: