Saturday 16 August 2008

வன்னியில் பரவலாக மோதல்கள் தொடர்கின்றன – கள்முனைகள் இரவு பகலாக அதிர்கின்றன

வவுனியா மாவட்டத்தின் வடமேற்கு பாலமோட்டை குஞ்சுக்குளம் பகுதியில் இலங்கை இராணுவத்தினர் மேற்கொண்ட பாரிய முன்னேற்ற முயற்சியினைத் தாம் முறியடித்துள்ளதாக தமிழீழ விடுதலைப் புலிகள் அறிவித்துள்ளனர்.


இத் தாக்குதலில் 11 இராணுவத்தினர் கொல்லப்பட்டு 19 பேர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். நேற்று சனிக்கிழமை முற்பகல் 11:30 மணியளவில் கடுமையான எறிகணை வீச்சுக்களுடன் இலங்கை இராணுவத்தினர் பாரிய முன்னேற்ற முயற்சியினை மேற்கொண்டனர்.


இம் முன்னேற்றத்திற்கு எதிராகத் பிற்பகல் 4:30 மணிவரை தீவிர முறியடிப்புத் தாக்குதலைத் தொடுத்ததாக இன்று விடுதலைப் புலிகள் அறிவித்துள்ளனர்.

இதேவேளை விடுதலைப் புலிகளுக்கும் இராணுவத்தினருக்கும் இடையில் விடத்தல்தீவுப் பகுதியில் தொடர்ச்சியாக மோதல் விடுதலைப் புலிகளுக்கும் இராணுவத்தினருக்கும் இடையில் விடத்தல்தீவுப் பகுதியில் தொடர்ச்சியாக மோதல் இடம்பெற்று வருகின்றது.


இம் மோதல்களில் படுகாயமடைந்த 08 இராணுவத்தினர் நேற்று வெள்ளிக்கிழமை இரவு 7 மணியளவில் மன்னார் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


கடந்த வெள்ளி முதல் பரவலாக இடம் பெற்றுவரும் கடுமையான மோதல்களில் 11 வரையிலான படையினர் மன்னார் வைத்தியசாலையில் தீவிர சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டு பின்னர் கொழும்பு அனுராதபுரம் வைத்தியசாலைகளுக்கு மாற்றப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.


இதற்கிடையில் வன்னியின் வடக்கில் முகமாலை, கிளாலி படைத்தளங்களிலிருந்து இலங்கைப் படையினர் கடும் எறிகணை வீச்சுக்களை நடத்தி வருகின்றனர்.

நேற்றுக் காலையில் இருந்து கடும் எறிகணை வீச்சுக்கள் நடத்தப்பட்டன. கிளாலியிலிருந்து பூநகரிப் பகுதிகளை நோக்கியும், முகமாலையிலிருந்து பளை, பச்சிலைப்பள்ளி, ஆனையிறவுப் பகுதிகளை நோக்கியும் படையினரின் எறிகணைகள் வீழ்ந்து வெடிப்பதாக பிரதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.


பளை, பூநகரிப் பகுதிகளிலிருந்து ஏறிகனவே மக்கள் வெளியேறிவிட்ட நிலையில் அவாகளின் வீடுகள், உடைமைகள் என்பன இவ்வெறிகணை வீச்சுக்களால் அழிவடைந்து வருவதாக கூறப்படுகிறது.

No comments: