நேற்றைய தினம் கிழக்குப் பல்கலைக்கழக முதலாம் வருட முகாமைத்துவ தழிழ் மாணவி ஒருவருக்கு இறுதி ஆண்டு சிங்கள மாணவியால் பகிடிவதை எனும் பெயரில் பாலியல் துஸ்பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
முகாமைத்துவக்கற்கை நெறிக்குத் தெரிவான முதலாம் ஆண்டு தழிழ் மாணவியை மேடையில் ஏற்றிய இறுதியாண்டு சிங்கள மாணவி சக ஆண்டு சிங்கள ஆண் மாணவகர் கை கொட்டி சிரிக்க குறித்த மாணவியின் உள்ளாடையினை கழற்றும் படி வற்புறுத்தி கழற்ற வைக்கப்பட்டுள்ளது. பீதியின் காரணம் பணிந்து குறித்த மாணவி அந்த துன்புறுத்தலின் பின்னர் மனநோயாளிக மாறியுள்ளார். மேலும் தொடர்ந்து கற்கை நெறியினை மேற்கொள்ள முடியாத அளவுக்கு மனநோயாளியாக மாறியுள்ளார்.
குறித்த காடைத்தனத்தினை மேற்கொண்ட சிங்கள மாணவி பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவின் தலைவரின் உறவுக்காரி என்பதால் கிழக்குப் பல்கலைக்கழக நிர்வாக வாய் பேசா மௌனியாக இருப்பதாகத் தெரியவருகின்றது
இவ்வாண்டு சிங்கள மாணவர்களின் ஆதிக்கம் பல்கலைக்கழகத்தில் அதிகரித்துள்ளது மாத்திரமல்லாமல் தமிழ் மாணவ மாணவியரின் கல்விக்கு குந்தகம் விளைவிக்கும் செயற்பாடுகளும் திட்டமிடப்பட்டு நிகழ்த்தப்படுவதாக தெரியவருகின்றது.
மேலும், சிங்கள மாணவர்களின் வழிபாட்டிற்காக ஓர் பௌத்த விகாரையும் பல்கலைக்கழக வளாகத்தில் அமைக்கப்படவுள்ளதாகவும் தெரியவருகின்றது. மேலும் சிங்கள மாணவரின் வேண்டுகொழுக்கு இணக்க தங்களது தங்குமிட பொறுப்பதிகாரியாக ஓர் சிங்களவர் நியமிக்கபடவுள்ளதாகவும் தெரியவருகின்றது.
1 comment:
கற்றலுக்கு தமிழர், சிங்களவர்கள் எனும் பேதம் கிடையாது எல்லோரும் மாணாக்கரே, அத்தோடு வந்தாறுமூலை பல்கலைக்கழகம் ஆங்கில மொழி மூலமானது, அங்கு எந்த இனத்தவரும் கல்வி பயிலலாம், தமிழ் மொழி பேசுபவர்கள் கண்டியிலோ, கொழும்பிலோ அல்லது நூறு வீதம் சிங்களவர்கள் வாழும் பகுதிகளில் உள்ள பல்கலைக்கழகளில் கல்வி பயிலலாம் அத்துடன் பகிடிவதையும் செய்யலாமெனில் ஏன் சிங்கள மாணாக்கர்கள் தமிழர்களின் பகுதிகளில் கல்வி பயிலக் கூடாது, பகிடிவதையும் செய்யலாகாது?
இனவாதப் பேயின் கோரத் தாண்டவத்தால் நாம் இழந்தது போதாதா, மாணவர்களின் மனங்களில் இனவாதமென்னும் நச்சைத் திணிப்பது ஆரோக்கியமன்று.
ஆனால் பல்கலைக் கழகங்களில் இடம்பெறும் பகிடிவதைகள் எல்லை மீறிப் போவதை "களத்துமேடு" கண்டிக்கின்றது.
Post a Comment