Sunday 17 August 2008

கப்பம் கேட்டு தொல்லை கொடுத்தால் உடனடியாக தொடர்பு கொள்ளூங்கள்

வர்த்தக நிலையங்களிலோ அல்லது வீடுகளிலோ வந்து கப்பம் கேட்டு தொல்லை கொடுப்பவர்கள் சம்பந்தமாக உடன் தகவல் வழங்குமாறு கொட்டாஞ்சேனை, ஆமர் வீதி பொலிஸார் பொதுமக்களுக்கு அறிவித்துள்ளனர்.


கடந்த 16ம் திகதி காலை இது சம்பந்தமான அறிவித்தல் பிரசுரம் கொட்டாஞ்சேனை, ஆமர் வீதி பொலிஸ் வட்டாரங்களில் வீதிகளில் ஒட்டப்பட்டுள்ளது.


தனி நபரோ அல்லது குழுவினரோ இணைந்து கப்பம் கேட்டு பயமுறுத்தினாலோ, அச்சுறுத்தினாலோ, தொல்லை தந்தாலோ அது சம்பந்தமாக கீழ் வரும் தொலைபேசி எண்களுடன் தொடர்புகொண்டு அறிவிக்குமாறு பொதுமக்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.


கொட்டாஞ்சேனை பொலிஸ் நிலையம் 011-2435653, 011-2432898 ஆமர் வீதி பொலிஸ் நிலையம் 2326834 மற்றும் அவசர அழைப்பு 118, 119 ஆகிய தொலைபேசியில் பாதிப்புக்குள்ளாகுபவர்கள் தகவல்களை வழங்கலாம்.


வெளிநாடுகளில் வாழும் ஈழத்தமிழர்கள் இலங்கை வரும்போது இதுபோன்ற கப்பத் தொல்லைகளுக்கு உட்படுவதாக தகவல்கள் வெளியாகின்றன. எனவே, தாயகம் திரும்பவுள்ளவர்கள் மேற்குறித்த தகவல்களை கருத்திற்கொள்வது சிலநேரங்களில் பயனளிக்கக் கூடியதாக இருக்கும்.

No comments: