போர் முனைப்புகளுக்கு மத்தியில் வடக்குகிழக்கு பகுதிகளுக்கு அதிகாரப்பரவலாக்கலை மேற்கொள்ளப்போவதாக இலங்கை அரசாங்கம் தெரிவித்து வரும் கருத்துகளை தமிழீழ விடுதலைப்புலிகள் நிராகரித்துள்ளனர். |
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச 13 வது திருத்தச்சட்டம் என்ற நாடகத்தை நடத்திக்கொண்டு தமிழ்தேசியத்திற்கு எதிரான யுத்தத்தை முன்னெடுப்பதாக தமிழீழ விடுதலைப்புலிகளின் அரசியல்துறைப்பொறுப்பாளர் பா நடேசன் குற்றம் சுமத்தியுள்ளார். அத்துடன் இனப்பிரச்சினைத்தீர்வுக்கான சமாதான ஏற்பாட்டாளராக செயற்படும் நோர்வே தரப்பினர் கிளிநொச்சிக்கு வந்து தமிழீழ விடுதலைப்புலிகளை சந்திப்பதற்கு அரசாங்கம் தடங்கலை ஏற்படுத்தி வருவதாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார். இந்தக்கருத்துக்கள் தமிழ்நெற் இணையத்தளத்தில் வெளியாகியுள்ளன. |
Monday, 2 June 2008
இலங்கை அரசாங்கத்தின் அதிகாரப்பரவலாக்கல் யோசனையை தமிழீழ விடுதலைப்புலிகள் நிராகரித்துள்ளனர்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment