Monday, 4 August 2008

பாலமோட்டையில் முறியடிப்புத் தாக்குதல்: ஒன்பது படையினர் பலி- 11 பேர் காயம் மோதல் தொடர்ந்த வண்ணம் உள்ளது.

வவுனியா மாவட்டத்தில் உள்ள பாலமோட்டையில் முன்நகர்வை மேற்கொண்ட சிறிலங்காப் படையினர் மீது தமிழீழ விடுதலைப் புலிகள் நடத்திய முறியடிப்புத் தாக்குதலில் ஒன்பது படையினர் கொல்லப்பட்டுள்ளதுடன் 11 பேர் காயமடைந்துள்ளனர்.

பாலமோட்டையில் இன்று திங்கட்கிழமை முற்பகல் 10:00 மணியளவில் செறிவான எறிகணைச் சூட்டாதரவுடன் படையினர் மேற்கொண்ட பெருமெடுப்பிலான முன்நகர்வை முறியடிக்கும் தாக்குதலை விடுதலைப் புலிகள் தீவிரமாக மேற்கொண்ட வண்ணம் உள்ளனர்.

இன்று பிற்பகல் வரையிலான தாக்குதலில் ஒன்பது படையினர் கொல்லப்பட்டனர். 11 பேர் காயமடைந்தனர்.

மோதல் தொடர்ந்த வண்ணம் உள்ளது.

No comments: