வன்னியை கைப்பற்றும் நடவடிக்கை மும்முரமாக இடம்பெற்று வருகையில் பல்கலைக்கழக மாணவர்களை தூண்டிவிட்டு தெற்கில் ஸ்திரமற்ற நிலையினை தோற்றுவிக்க ஜே.வி.பி. முயல்கின்றது.
இது எந்த வகையில் நியாயமாகும் என்று தகவல் மற்றும் ஊடகத்துறை அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்த்தன கேள்வி எழுப்பினார்.
வன்னியை கைப்பற்றுவதற்கு இன்னமும் 32 கிலோ மீற்றர் தூரமே உள்ளது. இந்த நிலையில் ஜே.வி.பி.யின் அரசியல் தேவைகளுக்காக மாணவர்களை பலிக்கடாவாக்கும் செயலுக்கு பெற்றோர்கள் தடை விதிக்க வேண்டும். ஜே.வி.பி.க்கு இன்று உயிர் பலியே தேவையாகவுள்ளது என்றும் அவர் கூறினார்.
நாரஹேன்பிட்டியிலுள்ள அரசாங்க தகவல் திணைக்கள கேட்போர் கூடத்தில் இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் மாநாட்டில் தெரிவித்தபோதே தகவல் மற்றும் ஊடகத்துறை அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்த்தன இதனைத் தெரிவித்தார்.
இங்கு அவர் மேலும் கூறியதாவது:
விடுதலைப் புலிகளை அழித்தொழிக்கும் யுத்தத்தில் எமது படையினர் வெற்றி கொண்டுள்ளதோடு முல்லைத்தீவையும் கைப்பற்றி வன்னியை கைப்பற்ற முன்னேறிக் கொண்டிருக்கின்றனர். இன்னமும் 32 கிலோமீற்றர் தூரமே மீதமாகவுள்ளது.
இவ்வாறானதொரு நிலையில் படையினருக்கு மனவலிமையை வழங்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இதைவிடுத்து பயங்கரவாதிகளுக்கு சார்பான நடவடிக்கைகளில் ஈடுபடலாகாது. ஜயவர்த்தனபுர பல்கலைக்கழக மாணவர்களை ஆர்ப்பாட்ட பேரணிக்கு அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியமே தூண்டியுள்ளது. இதன் பின்னணியில் ஜே.வி.பி.யே உள்ளது.
பல்கலைக்கழக மாணவர்கள் வியாழக்கிழமை நடத்திய 12 கிலோ மீற்றர் பேரணிக்கு பொலிஸார் எந்த விதமான தடையும் விதிக்கவில்லை. அப்பேரணி அதியுயர் பாதுகாப்பு வலயத்திற்குள் உட்புக முனைந்தபோது நுழைய வேண்டாமென்றும், மாணவர்களின் மகஜரை ஏற்றுக்கொள்ள ஜனாதிபதியின் பிரதிநிதி தயாராக இருப்பதாகவும் எனவே, ஐந்து பேரை அழைத்துச் செல்ல தயாரென்றும் பொலிஸார் தெரிவித்தனர்.
Friday, 15 August 2008
தெற்கில் ஸ்திரமற்ற நிலையினை ஏற்படுத்த ஜே.வி.பி. முயல்கின்றது - அரசாங்கம் குற்றச்சாட்டு
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment