மட்டக்களப்பு காத்தான்குடியில் இன்று செய்வாக்கிழமை மீண்டும் பதற்றம் தோன்றியுள்ளது. காத்தான்குடி முதலாம் குறிச்சியில் சிறீலங்கா தொலைத் தொடர்பு கோபுரத்தின் காவலாளியான தமிழர் ஒருவர் முஸ்லிங்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
இதேநேரம் சிறீலங்கா நீர்ப்பான சபைக்குச் சொந்தமான வாகனம் ஒன்றும் முஸ்லிங்களால் அடித்துடைக்கப்பட்டு கடுமையாகச் சேதமாக்கப்பட்டுள்ளது. அத்துடன் அதில் பயணித்தவர்கள் காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.
இதனையடுத்து காத்தான்குடியில் எழுந்த பதற்றம் காரணமாக காத்தான்குடியின் எல்லையில் அமைந்துள்ள கிராமத்தைச் சேர்ந்த 200 தமிழர்கள் தங்களுக்கான பாகாப்பைத் தேடி இடம்பெயர்ந்துள்ளனர் எமது மட்டக்களப்புச் செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
காத்தான்குடியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு முன்பாக இளநீர் விற்பனை செய்த நடைபாதையோர முஸ்லிம் வணிகரை சிறீலங்கா காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இச்சம்பவம், முஸ்லிம் வணிகரை தமிழர்கள் கடத்திச் சென்றதாக காத்தான்குடி முழுவதும் பரவியதை அடுத்து முஸ்லிங்களால் தமிழர் ஒருவர் வெடிக்கொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து இன்றைய பதற்றம் தோற்றியுள்ளதாக மட்டக்களப்புச் செய்திகள் தெரிவிக்கின்றன.
No comments:
Post a Comment