Tuesday, 3 June 2008

பாதுகாப்பு அமைச்சின் இணையத்தளம் ஊடக ஊடகங்களுக்கு மறைமுக மிரட்டல்

இலங்கை பாதுகாப்பு அமைச்சின் இணையத்தளத்தில் ஊடக சுந்திரத்திற்கு மறைமுக அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்பு அமைச்சின் இணையத்தளத்தில் ஆயுத படையினருக்கு எதிரான ஊடக துரோகத்தனத்தை நிறுத்துங்கள் என தலைப்பிட்டு, நீண்ட கட்டுரை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. த நேசன் பத்திரிகையின் இணையாசிரியர் கீத் நோயார் தாக்கப்பட்ட சம்பவத்துடன் படையினருக்கு தொடர்பு இருப்பதாக சுதந்திர ஊடக அமைப்பு வெளியிட்ட அறிக்கை தொடர்பில் இந்த இணையத்தில் கடுமையான விமர்சனம் முன்வைக்கப்பட்டுள்ளது.

பயங்கரவாதிகளுக்கு எதிராக பாரிய யுத்தம் ஒன்றை முன்னெடுத்திருக்கும் சந்தர்ப்பத்தில், இராணுவ நடவவடிக்கை, இராணுவ தளப்பாடங்கள் கொள்வனவு, இராணுவ பதவி உயர்வுகள் குறித்து ஊடகங்கள் மேற்கொள்ளும் விமர்சனங்கள்,

எதிரியின் தேவைக்காக செய்யப்படும் தேசதுரோக நடவடிக்கை எனவும் இவர்கள் விடுதலைப்புலிகளுக்கும் பந்தம் பிடிப்பவர்கள் எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த கட்டுரையில் அதிக வார்த்தைகள் கீத் நோயாரை தாக்கியது படையினர் அல்ல எனவும் வேறு சந்தர்ப்பவாத குழுவே அவரை தாக்கியதாக சந்தேகம் கொள்ளும் படியாக எழுதப்பட்டுள்ளன.

இதனை தவிர சிரச தொலைக்காட்சி, சண்டே லீடர், மேர்னிங் லீடர், இருதின, சன்டே டைம்ஸ், டெய்லி மிரர், லங்காடிசன்ட், லங்கா ஈநியூஸ் ஆகியன இராணுவத்தை விமர்சிக்கும் ஊடகங்கள்

என பாதுகாப்பு அமைச்சின் இணையத்தளத்தில் சுட்டிக்காட்டிப்பட்டுள்ளன. சுதந்திர ஊடக அமைப்பு இராணுவத்தின் மீது குற்றம்சுமத்த பாரிய முனைப்புகளை மேற்கொள்ளும் ஒரு அரசசார்பற்ற நிறுவனமாகும்.

கீத் நோயார் தாக்கப்பட்ட சம்பவத்துடன் படையினருக்கு தொடர்பு இருக்கிறது என அந்த அமைப்பு விடுத்துள்ள அறிக்கையில் அனுமானித்து கூறியுள்ளது.

உயர் இராணுவ அதிகாரிகள் குறித்து விமர்சித்தமை, பாதுகாப்பு விடயங்களை தொடர்பில் அவரின் சுயாதீனமான செய்தி அளிக்கை காரணமாகவே கீத் நோயார் தாக்கப்பட்டதாகவும் அந்த அமைப்பு பொய்யான தகவல்கள் பரப்பி வருகிறது.

35 – 40 வருடங்கள் இராணுவ அனுபவம் கொண்ட மற்றும் தமது வாழ்க்கையில் அதிக காலத்தை இராணுவத்தில் செலவளித்த அதிகாரிகளினால் யுத்தம் நெறிப்படுத்தப்படுகிறது.

இக்பால் அத்தாஸ் போன்றவர்களுக்கு, இராணுவ வியூகங்கள், பதவி உயர்வுகள், இராணுவ தளப்படாடங்கள் கொள்வனவு செய்தல் போன்ற விடயங்கள் குறித்து கேள்வி எழுப்ப தகுதியில்லை என நம்புவதாகவும் பாதுகாப்பு அமைச்சின் இணையத்தளம் குறிப்பிட்டுள்ளது.

http://www.defence.lk/new.asp?fname=20080603_06

No comments: