ஐக்கிய தேசிய கட்சி இன்று கொழும்பில் நடத்திய வாகன கவன ஒலி போராட்டத்தில் பெருமளவானோர் பங்கேற்றுள்ளனர்.
அரசாங்கம் இந்தப்போராட்டத்தை நிறுத்த பல வழிகளிலும் முயற்சித்தது எனினும் அவையாவும் தோல்வி கண்டன. முதலில் அச்சுறுத்தலை விடுத்த அரசாங்கம்
பின்னர் காவல்துறையினரை கொண்டு நீதிமன்ற நடவடிக்கைக்கு முனைந்தது எனினும் நீதிமன்றம் இந்தப்போராட்டம் கருத்துச்சுதந்திரத்தின் அடிப்படையில் இடம்பெறுவதாக கூறி அதனை தடுக்கமுடியாது என தீர்ப்பளித்தது.
இந்தநிலையில் சில இடங்களில் காவல்துறையினர் போராட்டத்தில் பங்கேற்ற வாகனங்களின் இலக்கங்களை குறித்துக்கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பம்பலபிட்டியில் ஐக்கிய தேசிய கட்சியின் கொழும்பு கிழக்கு அமைப்பாளர் ரோசி சேனாநாயக்க மீது காவல்துறையினர் தாக்குதல் நடத்த முயற்சித்ததாக தகவல் ஒன்று வெளியாகியுள்ளளது.
Tuesday, 3 June 2008
வாகன ஒலி எழுப்பும் போராட்டத்தில் பங்கேற்றோரின் வாகன இலக்கங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன-(வீடியோ இணைப்பு)
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment