Wednesday, 4 June 2008

பதுளையில் கழிவறை குழிக்குள்ளிருந்து பச்சிளம் சிசுவொன்றின் சடலம் மீட்பு

கழிவறை குழிக்குள்ளிருந்து பச்சிளம் சிசுவொன்றின் சடலத்தை பதுளைப் பொலீசார் மீட்டுள்ளனர்.

தகவல் ஒன்றினையடுத்து பதுறை பொலீஸ் நிலையப் பொறுப்பதிகாரி அசோக்க விஜயரட்ண தலைமையிலான குழுவினர், பதுளையைச் சேர்ந்த குட்டியகொல்லை என்ற இடத்தில் கழிவறைக் குழிக்குள்ளிருந்து மேற்படி சிசுவின் சடலத்ததை பதுறை பதில் நீதவான் சுமனா அமரசிங்க முன்னிலையில் மீட்டெடுத்துள்ளனர்.

இச்சடலம் தொடர்பாக சட்ட வைத்திய அதிகாரி மேற்கொண்ட பரிசோதனையில், பிரசவமாகியவுடனேயே உயிருடன் இச்சிசு கழிவறைக்குள் போடப்பட்டுள்ளமை தெரிய வந்துள்ளது.

அதன் பின்னரே சிசுவின் உயிர் பிரிந்திருப்பது தெரிய வந்துள்ளது.

பதுளை மஜிஸ்ரேட் பதில் நீதிபதியின் உத்தரவுக்கமையவும் பொலீசாருக்கு கிடைத்த தகவல் ஒன்றினை அடுத்தும் மீட்கப்பட்ட சிசுவின் தாயெனக் கருதப்படும் இளம் பெண்ணொருவரை பதுளை அரசின் பொது மருத்துவமனையில் வைத்து பொலீசார் கைது செய்துள்ளனர்.

இது குறித்த விசாரணைகளை பதுளைப் பொலீசார் மேற்கொண்டு வருகின்றனர்.

No comments: