தமிழர்களுக்கும் இந்தியர்களுக்கும் வெளிநாடுகளில் உரிய பாதுகாப்பு அளிக்கப்படவில்லை. அமெரிக்காவில் வேலை வாங்கித் தருவதாக கூறி அண்மையில் இந்தியர்கள் பலர் ஏமாற்றப்பட்டுள்ளனர் என ம.தி.மு.க. பொதுச் செயலாளர் தெரிவித்துள்ளார்.
நெல்லை மாவட்டம் பனவடலி சத்திரத்தை அடுத்த நடுவக் குறிச்சியில் ம.தி.மு.க. பிரமுகர் இல்ல திறப்பு விழாவில் கலந்து கொண்டு உரையற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அங்கு அவர் மேலும் கூறுகையில், கடந்த சில காலமாக தமிழர்களுக்கும், இந்தியர்களுக்கும் வெளிநாடுகளில் உரிய பாதுகாப்பு அளிக்கப்படவில்லை. இந்திய இளைஞர்கள் வேலை கிடைக்கும் என்ற ஆவலில் சொத்துக்களை விற்றும் கடன் வாங்கியும் வெளிநாடுகளுக்கு வேலைக்குச் செல்கின்றனர்.
சமீபத்தில் அமெரிக்காவில் வேலை வாங்கித் தருவதாகவும் கிரீன்கார்டு பெற்றுத் தருவதாகவும் கூறி ரூ.6 இலட்சம் வசூல் செய்து கொண்டு 540 பேரை அமெரிக்காவுக்கு அழைத்துச் சென்று ஏமாற்றியுள்ளனர். இந்தியாவில் ஒற்றுமை இல்லாமல் விவசாய நிலங்கள் பல துண்டுகளாக பிரிக்கப்பட்டு உள்ளன. எதிர்வரும் 16 ஆம் திகதி சென்னையில் பெரிய மாநாடு நடத்தப் போகிறோம். அந்த மாநாடு ம.தி.மு.க. வுக்கு திருப்புமுனையாக அமையும் என்றார்.
Monday, 2 June 2008
தமிழர்களுக்கும் இந்தியர்களுக்கும் வெளிநாடுகளில் பாதுகாப்பில்லை - வைகோ பேச்சு
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment