மாங்குளம் நாகதம்பிரான் கோவில் பக்தர்களில் இரு சிறுவர் உட்பட ஆறு பொதுமக்கள் திங்கட்கிழமை இரவு சிறீலங்கா படையினரின் ஆழஊடுருவும் அணியினர் மேற்கொண்ட நாசகார தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளதாக விடுதலைப்புலிகளின் சமாதான செயலகத்தின் செயலர் புலித்தேவன் அவர்கள் தெரிவித்துள்ளார்.
இத் தாக்குதலானது புத்தூர் பகுதியில் கனகராஜன் குளத்திற்கும் புளியங்குளத்திற்கும் இடையே இரவு 8 மணிக்கு இடம்பெற்றுள்ளது.
முள்ளிவாய்க்கால் முல்லைத்தீவு நாகதம்பிரான் கோவிலுக்கு பொதுமக்கள் பயணித்த 8-சிறி-6109 வாகனமே இத்தாக்குதலுக்கு இலக்காயுள்ளது.
இதன்போது கொல்லப்பட்டவர்கள்
வசந்தகுமார் (முள்ளிக்குளம்),
முருகதாஸ் (அம்பலவன் பொக்கனை),
தனுசன் (முருகதாசின் மகன்),
கணேஸ் (முருகதாஸின் சகோதரன்)
, மிஸ்.யோகமலர் மற்றும்
கெங்கா (யோகமலரின் மகள்) என வடக்கு கிழக்கு மனித உரிமைகள் செயலகம் தெரிவித்துள்ளது.
சித்திரா (அகவை 26), (வசந்தகுமாரின் மனைவி), சுஜந்தன் ( வசந்தகுமாரின் மகனட 18 மாத குழந்தை), 9 வயது மகள் ஜனனி (முருகதாஸின் மகள்), மற்றும் வினோஜினி ஆகியோர் காயமடைந்து முல்லைத்தீவு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
No comments:
Post a Comment