த நேசன், பொட்டம்லைன், ரிவிர ஆகிய பத்திரிகைகளை பிரசூரிக்கும் ரிவிர மீடியோ கோபரேசன் நிறுவனத்தின் உரிமை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் உறவினர் ஒருவருக்கு வழங்கப்படவுள்ளதாக ஊடக வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த மூன்று பத்திரிகைகளின் உள்ளடக்கங்களும் ராஜபக்ஸ சகோதரர்களின் கருத்துக்களை இனி பிரதிபலிக்கும் எனத் தெரிவிக்கப்படுகிறது.
இலங்கையின் பிரபல தொழில் அதிபர்களில் ஒருவரும், ஆர்பிகோ நிறுவனத்தின் தலைவருமான சேன யக்தெனியவிற்கு சொந்தமான ரிவிர பத்திரிகை நிறுவனத்தின் 49 வீத பங்குகளை ஜனாதிபதியின் உறவினரான நிலங்க ராஜபக்ஸ ஏற்கனவே கொள்வனவு செய்திருந்தார்.
யக்தெனியவினால் பெற்றுக்கொள்ளப்பட்ட 40 மில்லியன் கடன் தொகையொன்றை மீளச் செலுத்துவதற்காக பத்திரிகையின் பங்குகளை யக்தெனியா விற்பனை செய்திருந்தார்.
எஞ்சியுள்ள 51 வீத பங்குகளை ஜாலிய விக்ரமசூரிய என்பவரினால் கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
பங்குகளை விற்பனை செய்யும் அனைத்து கொடுக்கல் வாங்கல்களும் எதிர்வரும் நாட்களில் மேற்கொள்ளப்பட உள்ளதாகவும், நிறுவனத்தின் தலைவரான நிலங்க ராஜபக்ஸ நியமிக்கப்படுவார் எனவும் தெரியவருகிறது.
ஊடக நிறுவனத்தின் பிரதான நிறைவேற்று அதிகாரியாக கடமையாற்றும் கிரிசாந்த குரேவிற்கு பதிலாக அரச ஊடக நிறுவனமொன்றின் முக்கியஸ்தரை நியமிக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment