Monday, 2 June 2008

ஐ.நா.வின் உலக உணவு மாநாட்டின் ஆரம்ப அமர்வில் ஜனாதிபதி

ஐக்கிய நாடுகள் சபையின் உலக உணவு மாநாடு இத்தாலி தலைநகர் ரோமில் நாளை செவ்வாய்க்கிழமை ஆரம்பமாகிறது. இம்மாநாட்டில் கலந்து கொள்வதற்காக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான குழுவினர் அங்கு சென்றடைந்துள்ளனர். மாநாட்டின் ஆரம்ப அமர்வில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ விசேட உரையாற்றவுள்ளார்.

ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூனின் அழைப்பின் பேரிலேயே ஜனாதிபதி மாநாட்டில் கலந்து கொள்ள இத்தாலிக்கு சென்றுள்ளõர். இந்த மாநாட்டில் அமைச்சர்களான மைத்திரிபால சிறிசேன, சீ.பி. ரத்நாயக்க ஆகியோரும் கலந்து கொள்வதற்காக சென்றுள்ளனர். மாநாட்டில் 93 நாடுகளின் அரச தலைவர் உட்பட 3000 பிரதிநிதிகள் பங்குபற்றவுள்ளனர்.

உலக உணவு மாநாட்டில் இத்தாலி ஜனாதிபதி, ஐக்கிய, நாடுகள் சபையின் செயலாளர் நாயகம், பரிசுத்த பாப்பரசர் 16ஆவது ஆசீர்வாதப்பர், வத்திக்கான் அரசாங்கத்தின் செயலாளர் மற்றும் ஐ.நா. உலக உணவு, விவசாய அமைப்பின் பணிப்பாளர் ஆகியோர் முக்கிய உரையாற்றவுள்ளனர். உலகத்தில் உணவு பொருட்களின் விலை அதிகரிப்பு, உணவு பாதுகாப்பு, காலநிலை மாற்றத்தினால் முகம்கொடுக்க வேண்டிய சவால்கள் மற்றும் மின் உற்பத்திக்கு உணவை பயன்படுத்துவதில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்படவுள்ளது

இங்கு இத்தாலியில் உள்ள ஈழத்தமிழர்கள் வன்னியில் சிங்கள்ப்படைகளாலும் அதன் அரசாங்கத்தினாலும் வன்னியிலும்,யாழ்பாணத்திலும் மேற்கொள்ளப்படும் உணவுத்தடையை எதிர்த்து ஆர்பாட்டம் ஒன்றை ஏற்பாடு செய்யலாமே

No comments: