Monday, 2 June 2008

யாழ்ப்பாணம் திருநெல்வேலியில் சாமியார் வேடத்தில் கடவுள் பெயரில் திருட்டு, பெண் மயக்கம், நகைகள் மாயம்

சாமியார் வேடத்தில் சென்ற இருவர் வீடொன்றில் இருந்த பெண்ணின் நகைகளைத் திருடிச் சென்றுள்ளனர். இச்சம்பவம் யாழ்ப்பாணம் திருநெல்வேலி தாழையடி ஒழுங்கையில் உள்ள வீடொன்றில் இடம்பெற்றுள்ளது.

குறித்த வீட்டுக்கு சென்ற சாமியார் வேடம் அணிந்த இருவர் அவ்வீட்டில் தனியாகஇருந்த பெண்ணிடம் கடவுளின் பெயரைச் சொல்லி பால் செம்பு ஒன்றைக் கொடுத்து அதனை மணக்கும்படி கூறியுள்ளனர்.

அதன்படி பெண் அதனை மணந்தபோது மயக்கமுற்று கீழே விழுந்துள்ளார். அச்சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி மயக்கமுற்ற பெண் அணிந்திருந்த தங்க நகைகளை குறிப்பிட்ட நபர்கள் அபகரித்துச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மயக்கமுற்ற பெண் சுமார் ஒரு மணி நேரத்தின் பின்னர் மயக்கம் தெளிந்து பார்த்தபோது நகைகள் திருடப்பட்டு வீட்டின் கதவுகள் திறந்த நிலையில் காணப்பட்டதுடன் பொருட்களும் கிளறி விடப்பட்டிருந்ததாகவும் தான் அணிந்திருந்த நகைகள் மட்டுமே களவு போயுள்ளதாகவும் அப்பெண் பொலிசில் முறைப்பாடு கொடுத்துள்ளார்.

No comments: