Tuesday, 3 June 2008

யுத்தத்தை முன்னெடுக்க இந்தியாவும், அமெரிக்காவும் உதவியளிக்கிறது. - விக்ரமபாகு கருணாரத்ன

இன்றைய ஆட்சியாளர்களால் சமாதனத்திற்குப் பதிலாக யுத்தத்தைத் தொடர்ந்து முன்னெடுப்பதற்கு அமெரிக்காவும் இந்தியாவும் ஆதரவளித்து உதவி வழங்குவது மிகவும் வேதனைக்குரிய விடயமாகும். என்று இடது சாரி முன்னணியின் தலைவர் கலாநிதி விக்ரமபாகு கருணாரத்ன தெரிவித்தார்.

இன்று நாட்டில் வாழும் மக்கள் இரண்டு எதிரிகளுக்கு முகம் கொடுக்க வேண்டியுள்ளது. ஒன்று பணவீக்கம், இரண்டாவது யுத்தம். பணவீக்கம் தொடர்வாக அரசு கூறும் கருத்துக்கள் ஏற்றுக் கொள்ள முடியாதவையாகும்.

எரிபொருள் விலையேற்றம் போன்ற சர்வதேச காரணிகளை அரசு பணவீக்க நிலைக்கு காரணமாகக் கூறுகின்றது.

எரிபொருள் விலையேற்றம் போன்றவற்றால் 10வீத பணவிக்கம் ஏற்படலாம். உலகில் ஏனைய நாடுகளில் அவ்வாறே ஏற்பட்டுள்ளது.

ஆனால், இலங்கையில் 30 வீத பணவீக்க நிலை காணப்படுகின்றது. இந்த அரசு பாரிய அபிவிருத்தி என்ற போர்வையில் சர்வதேச நிறுவனங்களின் நலன்;களுக்காக இந்த நாட்டின் பொருளாதராத்தை அடகு வைத்தமையினாலேயே இந்நிலை ஏற்பட்டுள்ளது.

அரசு பொருளாதாரக் கொள்கையில் உள்ளுர் உற்பத்திகள் நாசமாகியுள்ளன. பல்தேசிய நிறுவனங்களின் வழிகாடட்டல்களால் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் தொழில்களை இழந்துள்ளனர். வசதிபடைத்தோர் வசதிகளை மேலும் பெற ஏழைகள் மேலும் ஏழைகள் ஆகும் நிலை அதிகரித்துள்ளது.

பயங்கரவாதத்திற்கு எதிராகப் போராடகிறோம் என்று அரசு கூறுவது முற்றிலும் பொய்யானதாகும். இன்று கிழக்கு மாகாணம் பிள்ளையானிடம் பொறுப்புக் கொடுக்கப்பட்டுள்ளது.

தமது பொருளாதார முறைமைக்குத் தலை அசைத்தால,; இவர்களால் பயங்கரவாதிகள் என்று கூறப்படுபவர்கள் பின்பு இவர்களால் புனிதர் ஆக்கப்ட்டுவர். அமெரிக்கத் தூதரும் இந்தியாவும் இதற்கு பின்னணியில் உள்ளன.

விடுதலைப் புலிகள் இவர்களின் பொருளாதார முறைமைக்குள் வருகைதராததால் அவர்கள் பயங்கரவாதிகள் என நாமம் சூட்டபட்டு அவர்களை அழிக்க சகல விதமான ஒத்துழைப்பையும் அமெரிக்காவும் இந்தியாவும் வழங்குகின்றன.

பாரிய அபிவிருத்தி என்ற நாமத்துக்குள் மறைந்திருக்கும் அமெரிக்க இந்திய நலன்களுக்கு ஜே.வி.பி.யும் துணை போகின்றது.

நன்றி தினக்குரல்

No comments: