சிறிலங்காவில் உள்ள நோர்வேத் தூதரகத்திற்கு தாக்குதல் அச்சம் ஏற்பட்டுள்ளதாக நோர்வே வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் நோர்வேயில் இருந்து வெளிவரும் ஆஃப்ரன்போஸ்ட் பத்திரிகை தெரிவித்துள்ளதாவது:
தீவிரவாதிகளின் தாக்குதல் அச்சம் உள்ள நாடுகளில் சிறிலங்கா உட்பட 6 நாடுகளில் உள்ள தமது தூதரகங்களின் பட்டியலை நோர்வே வெளிவிவகார அமைச்சு வெளியிட்டுள்ளது.
சிறிலங்கா, ஆப்கானிஸ்தான், சூடான், அல்ஜீரியா, பலஸ்தீனத்தின் அல்-ராம் பகுதி, பாகிஸ்தான் ஆகிய நாடுகளின் பட்டியலை வெளியிட்டுள்ளது.
இந்தப் பகுதிகளுக்கான பயணங்களைத் தவிர்க்குமாறும் நோர்வே வெளிவிவகார அமைச்சு தனது மக்களை எச்சரித்துள்ளது.
மேலும் கைரோ, பெய்ரூட், டமாகஸ், ஹராரே, தெஹ்ரான் ஆகிய பகுதிகளில் உள்ள நோர்வேத் தூதரகங்களுக்கும் பெரும் அச்சுறுத்தல்கள் உள்ளதாக அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறிலங்காவில் முஸ்லிம் தீவிரவாதமும், நோர்வேக்கு எதிரான சிங்கள கடும் போக்காளர்களின் நடவடிக்கைகளும் வளர்ச்சி பெற்று வருகையில் நோர்வே இந்த அறிவித்தலை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment