Monday, 2 June 2008

பிள்ளையான் அணியினர் ஆயுதங்களை எடுத்துச் செல்ல சிங்களப்படை தடை?

கிழக்கு மாகாண முதலமைச்சர் பிள்ளையானின் கட்சியை சேர்ந்த உறுப்பினர்கள் கிழக்கில் தம்வசம் ஆயுதங்களை கொண்டு செல்ல அனுமதிக்க முடியாது

என சிங்கள பாதுகாப்பு அதிகாரி இன்று அக்கரைபற்றில் தெரிவித்துள்ளனர். விசேட அதிரடிப்படையினர் மற்றும் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் உறுப்பினர்கள் (பிள்ளையான் ஒட்டுக்கும்பல்) இடையேயான பேச்சுவார்த்தை ஒன்று அக்கரைப்பற்று இராணுவ முகாமில் இன்று நடைபெற்றது.

ஆயுதங்களை கொண்டு செல்ல தமக்கு அனுமதி வழங்க வேண்டும் என தமிழ் மக்கள் விடுதலைப்புலிகளின் உறுப்பினர்கள் கோரினர், இதற்கு படையதிகாரிகள் மறுப்பு தெரிவித்ததாகவும் பிரதேசத்தில் ஆயுதங்களை தம்வசம் கொண்டு செல்ல அனுமதிக்க முடியாது எனவும் தெரிவித்துள்ளனர்.

No comments: