யாழ்ப்பாணம் குருசோ வீதியில் அமைந்துள்ள அரச சார்பற்ற நிறுவனமான கரித்தாஸ் கியூடெக் நிறுவத்திற்குச் சென்ற நூற்றுக் கணக்கான இராணுவத்தினர் அங்கு கடுமையான சோதனை நடவடிக்கையில்
ஈடுபட்டுள்ளார்கள். கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை இடம் பெற்ற இந்த சம்பவத்தின்போது அருட்தந்தையும் நிறுவன இயக்கனருமான ஜெயக்குமார் அடிகளார் இந்த சோதனை நடவடிக்கை சம்பந்தமாக இராணுவத்தினரிடம் கேட்ட போது தகவல் ஒன்றின் பெயரில் சோதனை நடவடிக்கை மேற் கொள்ளப்படுவதாகவும் அதனை மேலிடத்தின் உத்தரவின் பெயரில் மேற்கொள்வதாகவும் தெரிவித்துள்ளாhகள்.
சுமார் மூன்று மணித்தியாலங்கள் வரை சோதனை நடவடிக்கையை மேற்கொண்டுவிட்டு இராணுவத்தினர் திரும்பிச்சென்றுள்ளார்கள். கரித்தாஸ், கியூடெக் நிறுவனம் யாழ் குடா நாட்டில் பாதிக்கப்பட்ட மக்களுக்கான பல்வேறு திட்டங்களை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
Tuesday, 3 June 2008
யாழ்ப்பாணம் கரித்தாஸ் கியூடெக் நிறுவனத்தி்ல் இராணுவச் சோதனை
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment