தாயக மக்களின் பேரெழுச்சி,நாம் விடுதலையை விரைவுபடுத்துவதற்கு பெரும் பங்களிப்பாக இருக்கும்.படையினர் வன்னி வல்வளைப்பு நடவடிக்கையின் போது குழுக்களை அமைத்து போராட்டத்துக்கு மக்கள் பெரும் பங்களிப்பை வழங்கிய பெரு வரலாறு உண்டு.
பெரும் மக்கள் புரட்சியொன்று அன்று நடந்தது.ஜெயசிக்குறு காலத்தில் பலதரப்பட்டவர்களின் கீழ்நிலை மதிப்பீடுகளை தகர்த்து பெருவெற்றியை நாம் பெற,இலங்கை இராணுவத்தை ஒரு சில நாட்களுக்குள் விரட்டியடிக்க காரணமாக அமைந்தது அன்றைய மக்கள் எழுச்சிப் பங்களிப்புத்தான். அப்போது களங்களில் சகல ஒத்துழைப்புக்களையும் மக்கள்தான் செய்தார்கள்.
மீட்கப்பட்ட இடங்களை பாதுகாத்தார்கள். எல்லைப்படையாக திரண்டு நின்றார்கள்.
இது மக்களால் செய்யப்பட்ட பெரும் சாதனை.அதுபோன்று மக்களின் எழுச்சிதான் விடுதலையை நாம் விரைவுபடுத்துவதற்கு பெரும் பங்களிப்பாக இருக்கும் என விடுதலைப்புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன்.நேற்று புதுக்குடியிருப்பில் இடம்பெற்ற தேசிய பணிக்குழு சங்கம நிகழ்வில் பொதுமக்கள் மத்தியில் உரையாற்றுகையில் தெரிவித்துள்ளதாக சர்வதேச இணையத்தளங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
Tuesday, 3 June 2008
தாயக மக்களின் பேரெழுச்சி விடுதலையை விரைவுபடுத்தும்:புலிகளின் அரசியல்துறை பொறுப்பாளர் நடேசன் அறிவிப்பு!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment