Tuesday, 3 June 2008

நோர்வே அனுசரணையாளர்களின் பங்களிப்பின்றி பேச்சுவார்த்தை சாத்தியமற்றது- தமிழீழ விடுதலைப் புலிகள்

நோர்வே அனுசரணையாளர்களின் பங்களிப்பின்றி இலங்கை அரசாங்கத்துடன் சமாதானப் பேச்சுவார்த்தைகளில் கலந்துகொள்ளும் சாத்தியக்கூறுகள் எதுவும் இல்லையென தமிழீPழ விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளனர்.

நோர்வேயின் முக்கியஸ்தர்களான எரிக் சொல்ஹேய்ம், நோர்வேத் தூதுவர் நெருங்கிய தொடர்புகளைப் பேணி வருவதுடன், எதிர்கால சமாதானப் பேச்சுவார்;த்தைகள் தொடர்பாகக் கலந்துரையாடல்களை நடத்துவதற்கு அவர்களின் கிளிநொச்சி வருகையை எதிர்பார்த்திருப்பதாக கொழும்பு ஆங்கில ஊடகமொன்றுக்கு மின்னஞ்சல் மூலம் வழங்கிய செவ்வியில் தமிழீழ விடுதலைப் புலிகளின் சமாதான செயலகத் தலைவர் எஸ்.புலித்தேவன் கூறியுள்ளார்.

“இலங்கை அரசாங்கத்துடன் சமாதானப் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுவதற்கு முன்னர் நோர்வே அனுசரணையாளர்களுடன் பல்வேறு விடயங்கள் குறித்துக் கலந்துரையாடவேண்டியுள்ளது. நோர்வேப்; பிரதிநிதிகளுடன் சந்திப்புக்களை நடத்தவேண்டியுள்ளது. எனினும், நோர்வே பிரதிநிதிகள் கிளிநொச்சிக்கு வருவதற்கு இலங்கை அரசாங்கத்தால் அனுமதி வழங்கப்படவில்லை” என புலித்தேவன் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்துவரும்; மோதல்களை முடிவுக்குக்கொண்டுவரும்; நோக்கில் விடுதலைப் புலிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு எதிர்பார்த்திருப்பதாகவும், எனினும், இதுவரை சமாதானப் பேச்சுவார்த்தைக்கான எந்தவிதமான ஆர்வத்தையும் விடுதலைப் புலிகள் வெளியிடவில்லையென அண்மையில் சிங்கப்பூருக்கு விஜயம் மேற்கொண்டிருந்த இலங்கை வெளிவிவகார அமைச்சின் செயலாளர் பாலித கொஹண ஊடகங்களுக்குத் தெரிவித்திருந்தார்.

“விடுதலைப் புலிகள் பேச்சுவார்த்தைக்கு வருவதற்கு பூரண சுதந்திரம் உள்ளது. எனினும், ஆயுதங்களைக் கைவிட்டு இறுதி சமாதானத்தை நோக்கியதாக அந்தப் பேச்சுவார்த்தை இருக்க வேண்டும்” என அவர் கூறியிருந்தார்.

சமாதானப் பேச்சுவார்த்தைகளின் எதிர்காலம் குறித்துப் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு நோர்வேத் தரப்பினர் கிளிநொச்சிக்கு வருவார்களாயின் அவர்களின் பாதுகாப்புக்குத் தாம் உத்தரவாதம்; வழங்குவதாக புலித்தேவன் அந்த ஊடகத்துக்கு வழங்கிய செவ்வியில் தெரிவித்திருந்தார்.

“கிளிநொச்சிக்கு வருவதில் எந்தப் பாதுகாப்புச் சிக்கலும்; இல்லை. ஐக்கிய நாடுகள் சபை மற்றும் சர்வதேச அமைப்புக்களின் பிரதிநிதிகள் பலர் ஒவ்வொருநாளும்; எமது கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்கு வந்து செல்கின்றனர். நான் கைதுசெய்து வைக்கப்பட்டிருப்பதாக உருவாக்கப்பட்டிருக்கும் மற்றுமொரு கட்டுக்கதையே இது” என விடுதலைப் புலிகளின் சமாதான செயலகத் தலைவர் புலித்தேவன் குறிப்பிட்டுள்ளார்.

எனினும், விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்கு அனுசரணையாளர்களை அனுமதிப்பதற்கு தொடர்ந்தும் மறுப்புத் தெரிவித்துவருகிறது. நோர்வே அனுசரணையாளர்களும், விடுதலைப் புலிகளும் தொடர்புகளைப் பேணிவருகின்றனர் என்பது அரசாங்கத்துக்குத் தெரிந்திருந்தும், நோர்வேப் பிரதிநிதிகளை விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிக்குச் செல்ல அரசாங்கம் அனுமதிப்பாது என உயர்;மட்ட அரசாங்க அதிகாரி ஒருவரை மேற்கோள்காட்டி அந்த ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

No comments: