Sunday, 3 August 2008

இலங்கை மக்களின் சராசரி ஆயுள் காலம் 10 வருடங்களால் அதிகரித்துள்ளது

கடந்த ஏழு வருட காலப் பகுதியினில், இலங்கை மக்களின் சராசரி ஆயுள் காலம் 10 வருடங்களால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது. 2004 ம் ஆண்டு எடுக்கப்பட்ட கணிப்பின்படி மகளீருக்கான சராசரி ஆயுள் கால வயது 65 ஆக பதிவாகியுள்ளதுடன், ஆண்களின் வயது 60 ஆக இருந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் 2007 ம் ஆண்டு உலக சுகாதார ஸ்தாபனத்தால் மேற்கொள்ளப்பட்ட கணிப்பீட்டின் படி மகளீரின் சராசரி ஆயுள்காலம் 79 ஆக உயர்ந்துள்ளது.

அதேவேளை, ஆண்களின் ஆயுள் காலம் 69 ஆக உயர்ந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட சுகாதார மேம்பாடு காரணமாகவே இந்த வளர்ச்சி காணப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, ஆசிய ஏனைய நாடுகளுடன் ஒப்பிடுகையில் குறுகிய காலத்தினுள் ஆயுள் கால அதிகரிப்பு பதிவான நாடு இலங்கை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments: