Monday, 4 August 2008

வடபோரங்குகளில் 12 படையினர் பலி! 14 படையினர் காயம்



வடபோர் அரங்களில் விடுதலைப் புலிகளின் தாக்குதல் மற்றும் பொறிவெடிகள் மற்றும் பிற சம்பவங்களில் சிறீலங்காப் படையினர் தரப்பில் 12 படையினர் கொல்லப்பட்டு மேலும் 14 படையினர் காயங்களுக்கு உள்ளாகியுள்ளதாக சிறீலங்காப் பாதுகாப்பு ஊடக தகவல் மையம் அறிவித்துள்ளது.


மன்னார்

மன்னாரில் சிறீலங்காப் படையினர் மேற்கொண்ட வலிந்த ஆகிரமிப்பு நடவடிக்கைகளில் 7 சிறிலங்காப் படையினர் கொல்லப்பட்டுள்ளதாக சிறீலங்கா தேசிய பாதூப்பு ஊடக மையம் அறிவித்துள்ளது.

நேற்று மன்னார் வெள்ளாங்குளப் பகுதியில் ஆக்கிரமிப்பு யுத்தத்தில் ஈடுபட்ட சிறீலங்காப் படையினர் மீது விடுதலைப் புலிகள் நடத்திய எதிர்த் தாக்குதலில் சிறீலங்காப் படையினர் 7 பேர் கொல்லப்பட்டதோடு மேலும் 11 படையினர் படுகாயமடைந்துள்ளனர்.

மணலாறு

மணலாறுப் பகுதியில் விடுதலைப் புலிகளின் எதிர்த் தாக்குதலில் இரு சிறீலங்காப் படையினர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் இரு படையினர் காயமடைந்துள்ளனர். நேற்று ஞாயிற்றுக்கிழமை மண்கிண்டிமலை ஆண்டான் குளப் பகுதியிலேயே இத் தற்காப்புத் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளது.

முகமாலை

தனங்கிளப்பு பகுதியில் அமைந்துள்ள சிறீலங்கா காவலரண் ஒன்றில் சிறீலங்காப் படையினர் வைத்திருந்த கைக்குண்டின் விசைவில் விலகியதில் கைக்குண்டு வெடித்துள்ளது. இதில் மூன்று சிறீலங்காப் படையினர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் இரு படையினர் படுகாயமடைந்துள்ளனர்

No comments: