Monday, 4 August 2008

அக்கரைப்பற்றில் தமிழ் இளைஞன் கைது

அம்பாறை மாவட்ட அக்கரைப்பற்றில் தமிழ் இளைஞர் ஒருவர் அக்கரைப்பற்றுப் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

அக்கரைப்பற்று கண்ணகிபுரம் பகுதியைச் சேர்ந்த கிருஸ்ணபிள்ளை சசிகரன் என்ற இளைஞரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

நேற்றுக்காலை அக்கரைப்பற்றில் சந்தேகத்திற்கிடமான முறையில் நடமாடியதாக அக்கரைப்பற்று பொலிசாருக்குக் கிடைத்த தகவலையடுத்து அங்கு விரைந்து சென்ற பொலிசார் அவரைக் கைது செய்துள்ளனர்.

இவர் அப்பிரதேச இளைஞர் ஆயுதக் குழுவொன்றின் உறுப்பினரென விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளதாகவும் இவர் நாளை அக்கரைப்பற்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் எனவும் பொலிசார் தெரிவித்தனர்.

No comments: