Monday, 4 August 2008

வெள்ளவத்தையில் ஈபிடிபியினரிடையே மோதல்

வெள்ளவத்தையில் ஈபிடிபியினரிடையே மோதல் ஒன்று ஏற்பட்டது. ஈபிடிபியிலிருந்து விலகி லண்டன் சென்றுள்ள தவராசாவின் மகன்

தலைமையிலான தீனா கோஷ்டிக்கும் டக்ளஸ் தேவானந்தாவின் றைவர் கேதீஸ் இன் மகன் தலைமையிலான குருவி கோஷ்டியினருக்கும் இடையிலேயே ஏற்பட்ட மோதலில் உருட்டுக்கட்டைகள் கொக்கி கிரிக்கட் மட்டைகளைக் கொண்டு இருபகுதியினரும் கடுமையான தாக்குதலில் ஈடுபட்டனர்.

வெள்ளவத்தை காலி வீதியிலும் அதனை அண்டிய பகுதியிலும் மாறிமாறி இடம்பெற்ற மோதலை அடுத்து தலையிட்ட பொலிஸார் சிலரை கைதுசெய்து வெள்ளவத்தை பொலிஸ் நிலையம் கொண்டு சென்றதை அடுத்து டக்ளஸ் தேவானந்தா தலையிட்டதன் பேரில் இரு பகுதியினரும் உடனடியாக விடுவிக்கப்பட்டதாக தெரியவருகின்றது.

குறிப்பிட்ட மோதலில் ஈடுபட்ட இரு ஈபிடிபி கோஷ்டியினரும் கொழும்பில் தமிழ் மக்களிடம் வழிப்பறி கப்பம் பெண்கள் மாணவிகள் மீதான சேஷ்டைகள் என்பவற்றில் தொடர்ச்சியாக ஈடுபட்டு வருவதாக வெள்ளவத்தை மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

தகவல் - தமிழ்மகன்
வெள்ளவத்தை.

No comments: