Saturday, 9 August 2008

பாலமோட்டை, நவ்வி, குஞ்சுக்குளம் பகுதிகளில் முன்நகர்வுகள் முறியடிப்பு: 15 படையினர் பலி- 29 பேர் காயம்

வவுனியா மாவட்டத்தில் உள்ள பாலமோட்டை, நவ்வி, குஞ்சுக்குளம் வரையான பகுதிகளில் மூன்று முனைகளில் சிறிலங்காப் படையினர் இன்றும் நேற்றும் மேற்கொண்ட முன்நகர்வுகள் தமிழீழ விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டுள்ளன. இதில், 15 படையினர் கொல்லப்பட்டுள்ளனர். 29 பேர் காயமடைந்துள்ளனர்.

பாலமோட்டை, நவ்வி, குஞ்சுக்குளம் வரையான பகுதிகளில் இன்று சனிக்கிழமை காலை 7:10 மணிமுதல் மாலை 6:00 மணிவரை மூன்று முனைகளில சிறிலங்காப் படையினர் செறிவான எறிகணைச் சூட்டாதரவுடன் முன்நகர்வு நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.

விடுதலைப் புலிகளின் தீவிர எதிர்த்தாக்குதலின் மூலம் இம்முன்நகர்வுகள் முறியடிக்கப்பட்டன.

இதில், 11 படையினர் கொல்லப்பட்டுள்ளனர். 20 படையினர் காயமடைந்துள்ளனர். படையினரிடமிருந்து படைப்பொருட்கள் விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன.

இப்பகுதியில் நேற்று மூன்று முனைகளில் படையினர் மேற்கொண்ட முன்நகர்வுகள் விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டன.

இதில், நான்கு படையினர் கொல்லப்பட்டனர். ஒன்பது பேர் காயமடைந்தனர்.

puthinam.com

No comments: